பேரிடர் நீக்கப் பணி, மனித முதன்மையில் எப்போதும் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ, கடந்த சில நாட்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வலியுறுத்தினார். மே திங்கள் 26 மதல் 28ம் நாள் வரை, வூ பாங்கோ, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டு, மக்களுக்கும் மீட்புதவிப் பணியாளருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பேரிடர் நீக்கப்பணிக்கு வழிகாட்டினார். குறிப்பாக பேரிடர் நீக்க நிதி மற்றும் பொருட்களின் கண்காணிப்பு மற்றும் தணிக்கைப் பணியை வலுப்படுத்த வேண்டும் என்று வூ பாங்கோ, வலியுறுத்தினார். மேலாண்மை ஒழுங்கைக் கடைபிடித்து வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
|