• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 09:50:01    
தூய்மையான எரியாற்றலைப் பயன்படுத்தும் சீனாவின் திபெத்

cri
கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதாரம், விரைவாக வளர்ந்து வருகிறது. சமூகம், இடைவிடாமல் செழுமையடைந்து வருகிறது. ஆனால், வளர்ச்சியுடன், அதிக எரியாற்றல் செலவு மற்றும் அதிக மாசுபாட்டுப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது, தூய்மையான எரியாற்றலை வளர்ப்பது, எரியாற்றல் பற்றிய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகியுள்ளது. உலகின் கூரை என அழைக்கப்படும் சிங்காய்-திபெத் பீடபூமி, சீனா உள்ளிட்ட ஆசியாவின் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கும், முழு உலகின் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

சீனத் தலைமையமைச்சர் Wen Jiabao இவ்வாண்டின் சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், சீனா, தூய்மையான எரியாற்றலை பெரிதும் வளர்த்து, பொருளாதாரத்தில் தொடரவல்ல வளர்ச்சியை நிறைவேற்றும் என்று சுட்டிக்காட்டினார்.

மூலவளத்தைச் சிக்கனப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களையும், மாசுபாடற்ற மேலாண்மைத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி பரவல் செய்ய வேண்டும். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியையும் முன் மாதிரித் திட்டப்பணியையும் செயல்படுத்த வேண்டும். காற்று ஆற்றல், சூரிய ஆற்றல் முதலிய தூய்மையான எரியாற்றல் மற்றும் புதுப்பிக்க வல்ல எரியாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று Wen Jiabao கூறினார்.

சீனாவின் மிகப் பெரிய உயிரின வாழ்க்கைச் சூழல் பிரதேசமாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், நாட்டின் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புடன் தொடர்புடையது மட்டுமல்ல, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா முதலிய பிரதேசங்களுக்கும், மிக முக்கிய தாக்கம் ஏற்படுத்துகிறது. நாட்டின் ஆதரவு, தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் பொது மக்களின் கூட்டு முயற்சியுடன், திபெத், தூய்மையான எரியாற்றலை வளர்ப்பதில், பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. தற்போது, நீர் ஆற்றலை முக்கியமாக் கொண்டு, சூரிய ஆற்றல், மீத்தேன் வாயு, நில வெப்ப எரியாற்றல் முதலியவை அடங்கும் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் புதிய ரக எரியாற்றல் முறைமை, அடிப்படையில் உருவாகியுள்ளது.

திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் நாகரிகத்தை நிறுவுவது என்ற கருத்து, மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. தூய்மையான எரியாற்றலை வளர்ப்பது, உள்ளூர் அரசு மற்றும் பொது மக்களின் பொது கருத்தாக மாறியுள்ளது என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான, திபெத்தின் லாசா நகராட்சியின் தலைவர் duojicizhu அறிமுகப்படுத்தினார்.

தற்போது, கிராமப்புறங்களில் மீத்தேன் வாயுத் திட்டப்பணியை, தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு, பெரிதும் பரவல் செய்து, பல்வேறு இடங்களில் பல மீத்தேன் வாயு முன் மாதிரி கிராமங்களைக் கட்டியமைத்துள்ளது. மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவது, கிராம வாசிகளின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது மட்டுமல்ல, திபெத்தின் சுற்றுச்சூழலையும் பெருமளவில் பாதுகாத்துள்ளது என்றும் duojicizhu கூறினார்.

திபெத்திலுள்ள Linzhi பிரதேசத்தின் மீத்தேன் வாயு முன் மாதிரி கிராமத்தின் Zhuomalamu அம்மையார் கூறியதாவது,

முன்பு, இங்கு மீத்தேன் வாயு இல்லை. சமைத்து, நீரைச் சூடாக்கும் போது, விறகைப் பயன்படுத்த வேண்டும். வீடுகள் புகையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சமையலறையும், தூய்மையற்றிருந்தது. மீத்தேன் வாயுவைப் பயன்படுத்திய பின், வீடுகள் தூய்மையாக மாறியுள்ளன என்றார் அவர்.

மீத்தேன் வாயு கிராமத்தின் Qiaozhuoma அம்மையார் அறிமுகப்படுத்தியதாவது,  

முன்பு, மீத்தேன் வாயுக் குளமில்லை. ஆண்டுதோறும், பல மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது, மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவதால், மரங்களை வெட்டத் தேவையில்லை. இதனால் காட்டு வளம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கான மாசுபாட்டையும், எரியாற்றலின் செலவையும் குறைப்பது மட்டுமல்ல, திபெத் இன மக்களின் வாழ்க்கைக்கும் பெரும் வசதிகளை வழங்கியுள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான, லாசா நகராட்சியின் தலைவர் duojicizhu பெருமையுடன் கூறியதாவது,

இப்பொழுது, விசையை திறந்தால் தான், சமைக்கவோ நீரைச் சூடாக்கவோ முடியும். மீத்தேன் வாயு கிராம மக்களின் வீடுகள், மிகவும் தூய்மையாகக் காணப்படுகின்றன என்றார் அவர்.

திபெத், பீடபூமியில் இருக்கிறது. அதனால், அங்குள்ள தட்ப வெப்பம், தாழ்ந்ததாக இருக்கிறது. எனவே, மீத்தேன் வாயு பயன்பாடு, குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டது. இந்தத் தூய்மையான எரியாற்றலைச் சிறப்பாகப் பரவல் செய்து வளர்ப்பதற்காக, தன்னாட்சிப் பிரதேச அரசு, மனிதவளம் மற்றும் நிதித் துறைகளில், அதற்கு மிகுந்த ஆதரவை அளித்துள்ளது. பல்வேறு கிராமங்களின் மீத்தேன் வாயுக் குளங்களைச் சீரமைப்பதற்கு வழிக்காட்டி, தொழல் நுட்பங்களில் உத்தரவாதம் அளிப்பதற்காக, தொடர்புடைய தொழில் நுட்பப் பணியாளர்கள் சிறப்பாக அனுப்பப்பட்டுள்ளனர்.

பல்வகை தூய்மையான எரியாற்றல்களை அரசு வளர்த்து, பரவல் செய்து, பயன்படுத்தப் பாடுபடும். தற்போது, திபெத்தில் சூரிய ஆற்றல், அடிப்படையில் பரவல் செய்யப்பட்டுள்ளது என்று Duojicizhu கூறினார்.

சூரிய ஆற்றல் பயன்படுத்துவதில், மாசுபாடில்லை. இது மட்டுமல்ல, விளக்கு ஏற்றி, செல்லிட தொலைப் பேசிகளுக்கு மின்சாரம் நிரப்ப முடியும். தவிர, நகரங்களிலுள்ள பல இடங்களை வெப்பமேற்ற சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.

தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. எமது பொதுத் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக, தூய்மையான எரியாற்றலை வளர்க்கப் பாடுபட்டே தான் ஆக வேண்டும். உலகின் கடைசி தூய்மையான இடத்தின் நீரை பசுமையாகவும், வானத்தை நீலமாகவும் எப்பொழுதும் நிலைநிறுத்துவோமாக என்று duojicizhu கூறினார்.