• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 09:11:56    
திபெத் இனப் பாடகி Cedai Drolma

cri

திபெத் இனப் பாடகி Cedai Drolma, 1937ஆம் ஆண்டில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Shigatse பகுதியிலுள்ள ஒரு ஏழை பண்ணை அடிமை குடும்பத்தில் பிறந்தார். திபெத் மொழியில் Cedai என்பதற்கு நீண்ட ஆயுள் என்று பொருள். Drolma என்றால் பெண் என்பது பொருள். ஆனால், திபெத் பிரதேசம் அமைதியான முறையில் விடுதலை பெறும் முன், குழந்தையான Cedai Drolma தனது குடும்பத்தினருடன் இணைந்து துன்பமான வாழ்க்கை நடத்தினார். பண்ணை அடிமை சொந்தக்காரருக்காக வேலை செய்து வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது.

1951ஆம் ஆண்டு திபெத் விடுதலை பெற்ற பின், Cedai Drolmaவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. எதேச்சையான ஒரு வாய்ப்பினால், திபெத் இளம் மகளிர் சம்மேளனத்தில் அவர் சேர்ந்தார். அதற்குப் பின், இவ்வமைப்பு நடத்திய பொழுது போக்கு நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றங்களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வார்.
மக்களின் கவனத்தை ஈர்த்து வந்த Cedai Drolma, 21 வயதான போது உள்ளூரில் புகழ்பெற்ற பாடகியாக மாறினார். ஓராண்டுக்குப் பின், அவர் மறுபடியும் வாய்ப்பு ஒன்றைப் பெற்றார். அதாவது, திபெத்திற்கு இசை துறை திறமைசாலிகளை வளர்க்க, ஷாங்காய் இசை கல்லூரி, தேசிய இன வகுப்பை துவக்கியது. 1958ஆம் ஆண்டில், இக்கல்லூரியின் ஆசிரியர்கள் திபெத்திய மாணவர்களைச் சேர்த்தனர். தலைசிறந்த தனது பாடல் திறமை மூலம் ஆசிரியர்களின் பாராட்டை வென்றெடுத்த Cedai Drolma, சிறப்பான அனுமதி பெற்று, ஷாங்காய் இசை கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

தனது பாடல் திறமையால், Cedai Drolma ஷாங்காய் இசை கல்லூரியில் நுழைந்தார். ஆனால், ஓராண்டுக்குக் குறைவான நேரத்தில் ஒழுங்கான கல்வியைப் பெற்ற அவரைப் பொறுத்த வரை, கல்லூரியிலான படிப்பு மாபெரும் சவாலாக இருந்தது. குரல் நல்லது என ஆசிரியர்கள் Cedai Drolmaவை பாராட்டிய போதிலும், எழுத்துக்களும் இசை தத்துவமும் அவருக்கு தெரியவில்லை. கல்வி பயின்ற போக்கில் மிகத் தாமதமாக முன்னேற்றம் அடைந்த அவர், கல்லூரி கல்வியைக் கைவிடும் எண்ணத்தை கருத்தில் கொண்டார்.
Cedai Drolma சந்தித்த பிரச்சினையை அறிந்து கொண்ட பின், ஷாங்காய் இசைக் கல்லூரியின் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் மூலம் அவருக்கு உதவியளித்தனர். அவருக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்கள் தங்களாகவே திபெத் மொழியைக் கற்றுக் கொள்ளவும் துவங்கினர். அனைவரும்

சகோதர சகோதரிகளைப் போன்று Cedai Drolmaவுடன் பழகினர். பாடல் துறையில் கூட அவர் பெரும் முன்னேற்றம் அடைந்தார். அக்காலத்தில், தலையாயப் பாடகர் என்ற முறையில், செய்தி சுருள் திரைப்படம் ஒன்றின் தலைப்பு பாடலான விமோசனம் பெற்ற பண்ணை அடிமை பாட்டு பாடுகிறார் எனும் பாடலை அவர் பாடினார்.
அதற்குப் பின்னர், மேலதிக திபெத் மொழி பாடல்களை Cedai Drolma பாடினார். அவரது தனிச்சிறப்புமிக்க குரலும் மனமார்ந்த உணர்வும் பலர் மனதில் ஆழப்பதிந்துள்ளன. அவர் பாடிய "மலைப் பாடல் ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாடுவது", "பெய்ஜிங்கின் பொன் மலையில்" ஆகிய பாடல்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். இந்தப் பாடல்கள் சீனா முழுவதிலும் பரவலாக வரவேற்கப்பட்டு, மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. திபெத்தின் வளர்ச்சிக்காக, படிப்பை முடித்த Cedai Drolma தயக்கமின்றி ஷாங்காய்யை விட்டு, வளர்ந்து வந்த திபெத்

பிரதேசத்துக்குத் திரும்பினார்.
அங்கு, திபெத் ஆடல் பாடல் குழுவில் Cedai Drolma சேர்ந்தார். திபெத்திலுள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர், சொந்த பாடல் மூலம் ஆயர்களுக்கான வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பாடியுள்ளார். 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட Cedai Drolma இன்னமும் உச்ச தொனியிலும் வளமான கீச்சு குரலிலும் பாடல் பாட முடியும். பழைய திபெத்தில் பிறந்த பெண் பண்ணை அடிமை, திபெத் இனப் பாடகியாக வளர்ந்த தனிச்சிறப்பான அனுபவங்களை அவர் தனது பாடல் மூலம் கூறுவதோடு, இன்றைய திபெத்தில் மக்கள் நடத்தி வரும் இன்பமான வாழ்க்கையையும் பற்றி பாடுகிறார்.