• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 09:15:21    
சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதரின் நல்வாழ்த்துக்கள்

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முழு மனித குலத்தின் மாபெரும் விழாவாகும். விளையாட்டை அரசியலாக்க கூடாது. சீனாவிலுள்ள ஸ்பெயின் தூதர் Carlos Blacas Villa, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வாய்ப்பை ஸ்பெயின் முழுமையாக பயன்படுத்தி, சீன மக்களிடம் ஸ்பானிய பண்பாட்டை பரவலாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம் அமைதியை அடையாளப்படுத்தி வருகின்றது. இது முழு மனித குலத்துக்குமானது. விளையாட்டை அரசியலாக்கு கூடாது என்பதை ஸ்பெயின் அரசு பல்வேறு நிலைமைகளில் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முழு உலக மக்களின் முக்கிய விழாவாகும். அத்துடன், அனைத்து வீரர்களின் கனவாகும். ஒலிம்பிக் கொடியில், மாறுபட்ட இனவெறிகள், அரசியல் அமைப்பு முறைகள், மத நம்பிக்கைகள் மற்றும் சமூக இன

மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று Carlos தெரிவித்தார். பண்பாட்டு பரிமாற்றம் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, ஸ்பெயின் பிரதிநிதிக் குழு, சிறந்த சாதனையைப் பெற பாடுபடுவதோடு, சீன மக்களுக்கு ஸ்பானிய பண்பாட்டை பரவலாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
முடிவடைந்த சீன-ஸ்பெயின் ஆண்டு நிகழ்வால் நட்புறவில், குறிப்பிடத்தக்க

முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, ஸ்பானிய பண்பாடு சீனாவில் பரவுவதை நாங்கள் தொடர்ந்து முன்னேற்றுவோம். சீன மக்கள் ஸ்பெயினை மேலும் நன்கு அறிந்து கொள்வதற்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துணை புரிய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.