• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 19:25:48    
மீட்புதவித் தொகை மற்றும் பொருட்களுக்கான கண்காணிப்பு

cri

கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சிச்சுவான் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பிரேதசம், பெருமளவான மீட்புதவித் தொகை மற்றும் பொருட்களைப் பெற்றுள்ளது. இந்தத் தொகையும் பொருட்களும் சரியாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படுத்துவதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, சிச்சுவான் மாநிலம் கண்காணிப்பு அளவை வலுப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டு நிலைமையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் கொள்ள பாடுபடுகின்றது.

புள்ளிவிபரங்களின் படி, மே 29ம் நாள் வரை, சிச்சுவான் மாநிலம், பேரிடர் நீக்க மீட்புதவிக்காக சிறப்பு நிதி 600 கோடி யுவானையும், ஏராளமான மீட்புதவிப் பொருட்களையும் பெற்றுள்ளது. கடமை மற்றும் சட்டவிதிகளை மீறும் நடவடிக்கைகள் நிகழாமல் தவிர்க்கும் வகையில், கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் முக்கிய இடங்களாக கொண்டு, மீட்புதவித் தொகை, பொருட்களைப் பெறுதல் மற்றும் வினியோகம் முழுவதையும் கண்காணித்து நிர்வகிப்பதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாநிலத்தின் சட்ட மற்றும் பரிசோதனை குழுவின் துணை செயலாளர் Ren jun nian தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மீட்புதவித் தொகையையும் பொருட்களையும் வினியோகிக்கும் மாநில நிலையான 11 வாரியங்களும், கடுமையாக பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களுக்கும் 17 கண்காணிப்புப் பணிக் குழுக்களை அனுப்பியுள்ளன என்றார் அவர்.

அதேவேளை, பேரிடர் நீக்க மீட்புதவியில் ஏற்பட்ட கடமை மற்றும் சட்டவிதிகளை மீறும் நடவடிக்கைகள் குறித்து, சிச்சுவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள் சரிபார்த்து விரைவாக கையாண்டு, காலதாமதமின்றி வெளியிட்டன. பற்றக்குறையான மீட்புதவிப் பொருட்களை, உள்ளூர் அதிகாரிகள் தன்னலத்தோடு பயன்படுத்தியது கண்டறிந்ததும் உறுதியாக கையாண்டு அவர்களின் மீது, தண்டனை விதிக்க வேண்டும் என்றும் Ren jun nian தொடர்புடைய வாரியங்களை சிறப்பாக கோரினார்.

கட்சி மற்றும் அரசியல் ஊழியர்கள், தொழில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூடாரங்களை தமது உடன்பிறப்புகளுக்கு வழங்குவதைக் கண்டறிந்தால், நிச்சயமாக தண்டனை அளிக்கப்படுவர் என்றார் அவர்.

தவிர, மீட்புதவித்தொகை மற்றும் பொருட்கள் பெறுதல், சேமிப்பு, வினியோகம், பயன்பாடு ஆகியவற்றை தணிக்கை செய்ய, சீனத் தேசியத் தணிக்கை ஆணையம் பணியாளர்களை அனுப்பியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புதவிப் பொருட்களை ஒழுங்காக வினியோகித்து, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, வேண்டிய பொருட்களை அடிப்படையில் கிடைக்கச் செய்ய முடியும். சிறப்பு பணியாளர்கள், பொருட்களை நிர்வகித்து வினியோகிப்பதற்குப் பொறுப்பேற்கும் அடிமட்ட நிலை அதிகாரிகளைக் கண்காணித்து, மேலாண்ம செய்து, ஒவ்வொரு தொகுதி உதவித்தொகை மற்றும் பொருட்களின் பயன்பாட்டு நிலைமையை விரிவாக பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களும் நகரங்களும் மீட்புதவி நிதி மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கண்டிப்பான நிர்வாக விதிகளை வகுத்துள்ளன. பெய்சுவான் மாவட்டத்தின் பேரிடர் நீக்க மீட்புதவி முன்னணி தலைமையகத்தின் நிதி மற்றும் பொருட்களை கையாளும் நிர்வாக குழுத் தலைவர் Zhou ming செய்தியாளரிடம் பேசுகையில், தமக்கான கண்காணிப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்தியது என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

நமது நிதி மற்றும் பொருட்களைக் கையாளும் குழுக்களைக் கண்காணிக்கும் பொருட்டு, பெய்சுவான் மாவட்ட மக்கள் பேரவையின் துணைத் தலைவர் ஒருவரை எமது குழுவில் சேர அழைத்துள்ளோம். அத்துடன், நிதி மற்றும் பொருட்களின் வினியோக நிலைமையைக் கண்காணிக்க, மீட்புதவி இடத்தில் தொண்டர் ஒருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர், தனியார் வணிகராவார் என்றார் அவர்.

எதிர்காலத்தில், உள்ளூரின் தொழில் வணிகம், தணிக்கை, விலைவாசி, தரப் பரிசோதனை, பொது பாதுகாப்பு முதலிய வாரியங்கள் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீட்புதவி நிதி மற்றும் பொருட்களின் பயன்பாட்டுக்கான கண்காணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும். அதேவேளை, தகவல் தொடர்பில் வெளிப்படையான அமைப்பு முறையை நிறுவி, மீட்புதவி நிதி மற்றும் பொருட்களைப் பெறுதலையும் பகிர்வு மற்றும் பயன்பாட்டையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் கொள்ளவேண்டும் என்று, சிச்சுவான் மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.