சர்வதேச சமூகம் தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு உதவி அளித்து வருகின்றது. பாகிஸ்தான் செம்பிறைச் சங்கம் இன்று பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மூலம், 3000 கூடாரங்களை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசத்துக்கு மேலும் 50 கோடி ஜப்பானிய யென் மதிப்புள்ள உதவியை வழங்குவதாக ஜப்பானிய அமைச்சரவையின் முதன்மை செயலாளர் Machimura Nobutaka நேற்று அறிவித்தார். நேற்று, கொலம்பிய அரசுத் தலைவர், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒரு விருப்ப துவக்கப் பள்ளியைக் கட்டியமைக்க ஒரு கோடி யுவானை வழங்குவதாகக் தாய்லாந்து இளவரசி Sirindhorn நேற்று தெரிவித்தார். எகிப்து, பிரான்ஸ், யுக்ரேன், பெலாரஸ், ஹங்கேரி, மால்டோவா, ஈரான் முதலிய நாடுகளும் சீனாவுக்கு உதவி அளித்துள்ளன. மேலும், சர்வதேசச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவுக்கு 5 கோடியே 95 இலட்சம் யுரோ நிதியுதவியை வழங்குமாறு சர்வதேச சமூகத்துக்கு வேண்டிகோள் விடுத்துள்ளது.
|