சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் தலைமையமைச்சரும், பேரிடர் நீக்கப் பணிக்கான தலைமையகத்தின் தலைவருமான வென் சியாபாவ் நேற்று பெய்சிங்கில் இந்த தலைமையகத்தின் கூட்டத்தை நடத்தினார். பேரிடர் நீக்கப் பணிக்கான நன்கொடைப் பொருட்கள் மற்றும் நிதி பற்றிய நிர்வாகப் பணியை ஒழுங்குபடுத்தி, வலுப்படுத்துவதோடு, நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியின் பங்கீடு,பயன்பாடு ஆகிய துறைகளிலான பிரச்சினைகளை செவ்வனே தீர்க்க வேண்டும் என்று அவர் கோரினார்.
நன்கொடைப் பொருட்கள் மற்றும் நிதி அனைத்தும், பேரிடர் நீக்கம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூட்டம் சுட்டிக்காட்டியது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிப்பு அளவுக்கு இணங்க, முக்கிய பகுதியை உத்தரவாதம் செய்தல், வெளிப்படை, நியாயம் என்ற கோட்பாடுகளில், நிவாரணப் பொருட்களின் பங்கீடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கை உரிமை மற்றும் நலனை பேணிக்காக்க வேண்டும். பொருட்களின் பங்கீட்டு தேவையை உத்தரவாதம் செய்யும் அதே வேளையில், வீண் விரையம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்தியது.
|