சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் நன்கொடை
cri
சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று நன்கொடை நடவடிக்கை நடத்தியது. நடவடிக்கை மூலம் கிடைத்த வருமானம் எல்லாம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது.
நடவடிக்கையில் மொத்தம் 3 இலட்சம் யுவானுக்கு மேற்பட்ட நன்கொடை தொகை திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்துக்குப் பின், பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷாரப் விரைவாக சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார். பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று அவர் ஆறுதல் செய்தார். பாகிஸ்தான் அரசும் மக்களும் சீனாவுக்கு நிதி மற்றும் பொருள் உதவி வழங்கியுள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசு ஒரு மருத்துவ குழுவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியது.
|
|