• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-01 18:44:27    
பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சீன அரசுத் தலைவர்

cri

சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இன்று நிலநடுக்கத்தால் பாதி்க்கப்பட்ட காங் சூ மாநிலத்தின் Long Nan நகரில், பேரிடர் நீக்க பணிக்கு தலைமை தாங்கினார்.

இன்று பிற்பகல், இந்நகரின் முதலாவது மக்கள் மருத்துவ மனையின் எளிய கூடாரங்களில் காயமுற்றோர், மருத்துவ பணியாளர், அங்கே மீட்புதவிப் பணியில் கலந்து கொண்டு வரும் பாகிஸ்தான் சர்வதேச மருத்துவக்குழுவின் உறுப்பினர் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். இதற்கு பின், Long Nan நகரின் Wu Du பிரதேசத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட நிலைமையை பரிசோதனை செய்து, பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்கினார்.

நேற்று கடுமையாக பாதிக்கப்பட்ட ஷான் சி மாநிலத்தின் Ning Qiang மாவட்டத்தில், உள்ளூர் பொது மக்களையும் மீட்புதவிப் பணியாளர்களையும் ஹு சிந்தாவ் பார்த்தார், சீனாவின் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தை பணியாளர்களுக்கும் குழந்தைகள் விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சீன அரசு எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான குடியமர்த்தும் பணியை செவ்வனே செய்து, உற்பத்தியை மீட்டெடுப்பதையும் தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பதையும் உதவி செய்வது உறுதி என்று ஹு சிந்தாவ் தெரிவித்தார்.