நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான வாழ்க்கை ஒழுங்கை விரைவில் மீட்கும் விகையில்,சீன அரசு உள்ளூர் மக்களின் உறைவிடப் பிரச்சினையை முதன்மதலாக தீர்க்கும். சீனப் பொதுத் துறை அமைச்சத்தின் பொறுப்பாளர் ஒருவர் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உறைவிடப் பிரச்சினையைத் தீர்ப்பது, வாழ்க்கை ஒழுங்கை மீட்பதற்கான முன்நிபந்தனையாகும். பாதிப்பு அளவுக்கிணங்க, இப்பிரச்சினை திட்டப்படி தீர்க்கப்படும். நீண்டகால உறைவிடப் பிரச்சினையே, புனரமைப்பு போக்கில் ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டும் என்று இப்பொறுப்பாளர் கூறினார்.
தற்போது, அரசு வாரியங்களும் சமூகமும் வழங்கிய கூடாரங்கள் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக உறைவிடப் பிரச்சினையை தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
|