இன்று காலை 8மணிக்கு, யி சாங் நகரின் உலக அமைதி பூங்காவில், பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதற்கு முன், இதில் கலந்து கொண்டோர் அவைவரும் வென்ச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இன்று சர்வதேச குழந்தைகள் விழாவாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள குழந்தைகளுக்கு தீபம் ஏந்தும் நபுர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நண்பகல் 12.20மணிக்கு, யாங் சு ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கு தீபம் சென்றடைந்ததுடன், யி சாங் நகரிலுள்ள தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நாளை, பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் சிங்சோ நகரில் நடைபெறவுள்ளது.
|