சீனாவின் சி ச்சுவானுக்கு அருகிலுள்ள ஷான் சி மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமைகளை பார்வையிட்ட பின், நேற்று, சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், கான் சூ மாநிலத்தின் லோங் நான் நகர் சென்றடைந்து, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து, புனரமைப்புப் பணி பற்றி விவாதித்தார்.
லோங் நான் நகர், சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் நகரை மிகவும் நெருங்கிய கான் சூ மாநிலத்தின் நகரமாகும். அது, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
உற்பத்தி மூலம், தற்காப்பு மீட்புதவி மேற்கொண்டு, தாயகத்தைப் புனரமைக்குமாறு மக்களை ஹு சிந்தாவ் ஊக்குவித்தார். அதே வேளையில், அப்பிரதேசத்தில் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ள விடுதலைப்படை வீரர்களுக்கும் ஆயுதக் காவற்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.
லோங் நான் நகரின் முதலாவது கூடார மக்கள் மருத்துவமனைக்கு சென்று, காயமுற்றோரையும் மருத்துவப் பணியாளர்களையும் ஹு சிந்தாவ் அன்போடு சந்தித்தார். அதில், காயமுற்றோருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க உதவி செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் சர்வதேச மருத்துவச் சிகிச்சைக் குழுவையும் சந்தித்தார். அவர், சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், அக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
நேற்றிரவு, அவர் தொடர் வண்டியில் கூட்டம் நடத்தினார். உற்பத்தி மீட்பு பற்றிய கொள்கைகளை வகுத்து, சீற்றத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை இயன்ற அளவில் குறைக்க வேண்டும். பல்வேறு துறைகளின் ஊக்கத்தை தூண்டி, புனரமைப்புப் பணியை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|