பேரிடர் நீக்கப் பணியையும் பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் மையமாக கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தையும் அமைப்புப் பணியையும் மேலும் முன்னேற்ற வேண்டும் என்று ஜூன் திங்கள் முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணை அரசுத் தலைவருமான ஷி ச்சின்பீங், தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத் துறை, பெய்சிங்கில் நடத்திய சீன முழுவதிலிருந்தான அமைப்புத் துறையின் பேரிடர் நீக்கப்பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நமது கட்சி, பல்வேறு இடர்ப்பாடுகளைச் சமாளித்து பல்வேறு சிக்கலான நிலைமைகளைக் கட்டுப்படுத்தி, வலிமையான போர் ஆற்றலை வாய்ந்த மார்க்ஸிஸக் கட்சியாகும் என்பதை இப்பேரிடர் நீக்கப்பணி மீண்டும் உறுதியாக நிரூபித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி்ல் பல்வேறு நிலை கட்சிக் கமிட்டிகள், பேரிடர் நீக்கப்பணியை இப்போதைய மிக முகிகயமான அவசரமான கடமையாக கருத வேண்டும். அதற்கான பணிகள் மற்றும் நடவடிக்கைகளின் செயல்பாட்டை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஷி ச்சின்பீங் கூறினார்.
|