FAW-VW தொழில் நிறுவனம், சீன FAW, ஜெர்மனி VM, audi வாகனத் தொழில் நிறுவனங்கள் இணைந்து கூட்டக இயக்கப்படுகின்ற தொழில் நிறுவனமாகும். அதன் பணியாளர்கள் சீனா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளைச் சேந்தவராவார். 2005ம் ஆண்டு, maschgan 4ம் முறையாக சீனாவுக்கு வந்து பணி புரிகின்றார்.
என் பெயர் Dieter maschgan. எனக்கு 52 வயது ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். 27 ஆண்டுகளுக்கு முன் நான் ஜெர்மன் VW தொழில் நிறுவனத்தில் சேந்தேன். இதுவரை, நான் சீனாவில் 12 ஆண்டுகளாகப் பணி புரிந்துள்ளேன்.
maschgan, பெர்லினில் பிறந்தார். குழந்தை பருவக் காலம் முதல், வாகனங்கள் மீதான ஆர்வம் அவரது உள்ளதில் எழுந்தது. பிற குழந்தைகள் விளையாடிய போது, அவர் வாகன இதழ்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். அதே இலக்கை நோக்கி பாடுபட்டு வந்தார். 1980ம் ஆண்டு அவர், ஜெர்மன் VW தொழில் நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கினார். 1988ம் ஆண்டு, ஜெர்மன் தரப்பினி பிரதிநிதியாக, அவர் சீனாவுக்கு வந்தார்.
1988ம் ஆண்டு, நான் முதல் முறையாக சீனாவுக்கு வந்தேன். ஷாங்காய் VW வாகனத் தொழில் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்போது, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை, சீன தலைவர் dengxiaoping புதிதாக முன்வைத்தார். அனைத்து பணிகளும், தொடக்க நிலையில் இருந்தன. அப்போது ஷாங்காயில் பணி புரிவது, களைப்பாக இல்லை.
அதற்குப் பின், சில முறை அவர் சீனாவுக்கு வந்து பணி புரிந்தார். தொழில்துறையின் விரைவான வளர்ச்சி தவிர, changchun நகரில் நடைபெற்ற 2007ம் ஆண்டு 6வது குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டியும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வடக்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியும், அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளன.
changchunஇல் தொழில்துறைமயமாக்கத்தைத் தவிர, சுற்றுலா தொழிலான சர்வதேசமயமாக்கத்தையும் அந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, விடுதிகளில் அதிக விளையாட்டு வீரர்கள் வசித்த போதிலும், அந்நகரின் ஏற்பாட்டு பணி, மிக ஒழுங்காக இருந்தது. வீதிகள் மற்றும் விடுதிகளிலிருந்து, இதை தெளிவாக உணர முடியும். changchun, மேன்மேலும் சர்வதேசமயமாக்கமானது என்பதை நான் உணர்ந்தேன்.
சீனாவில் சுமூகமாக வேலை செய்வதற்காக, maschganக்கு நிறுவனம் மொழி பெயர்பாளரை ஏற்பாடு செய்தது. அதனால், அவர் நூணுக்கமாக தொழில்நுட்ப மற்றும் மனித மூலவளப் பணியை செய்ய முடிந்தது.
கடந்த பல ஆண்டுகளில் VWஇல் பணி புரிவது, எனக்கு குடும்பத்தில் பணியாற்றுவது போன்ற உணர்ச்சியை அளிக்கிறது. பலர் எனது மொழி சிக்கல்களை சமாளித்து, பண்பாட்டு வேறுபாட்டினால் ஏற்பட்ட கடினங்களை நீக்க உதவி செய்தனர்.
சீன-ஜெர்மன் கூட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனமாக, சீன பணியாளர்களையும் வெளிநாட்டு பணியாளர்களையும் எவ்வாறு செவ்வனே ஒருங்கிணைப்பது என்பதை, maschgan கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்.
கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி தொடங்கிய பின், முன் அனுபவம் ஒன்றுமில்லாத அடிப்படையிலே, பல பணிகளை மேற்கொண்டோம். படிப்பின் அடிப்படையில் வளர வேண்டுமானால், சிறப்புத் துறையிலான அறிவுகள் வேண்டும். ஜெர்மனி பணியாளர்களுக்கு அதில் மேம்பாடு உண்டு. ஆனால், சீனப் பணியாளர்களின் சுறுசுறுப்பான மனப்பான்மையும் செயல்பாடும் மேலும் முக்கியமானது.
1992ம் ஆண்டு, FAW-VW தொழில்சாலை நிறுவப்பட்ட போது, ஆண்டுக்கு 8000 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. பணியாளர்கள் குறைவே அதன் காரணமாகும். 2007ம் ஆண்டில், ஆண்டுக்கு சுமார் 4 இலட்சத்து 90 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிந்தது. இது, மிக பெரிய முன்னேற்றமாகும். இதில் ஜெர்மனி மேலாண்மையாளர்களின் பங்குகளைத் தவிர, சீன மேலாண்மை பணியாயாளர்களின் முயற்சி, மேலும் குறிப்பிடத்தக்கத்து. தவிரவும், திறமைசாலிகளை வளர்ப்பது, FAW-VW தொழில் நிறுவனத்தின் முக்கிய ஆதாரத்தூண் ஆகும் என்று maschgan கூறினார்.
இவ்வாண்டு, புதிதாக படிப்பு முடித்த பல்கலைக்கழக மாணவர்கள் பலரைச் சேர்த்தோம். அவர்களுக்கு வேலை அனுபவங்கள் இல்லை. அதனால், நாங்கள், திறமைசாலிகளை பயிற்றுவிக்கும் பணியை, செவ்வனே செய்ய வேண்டும். அவர்களின் நடைமுறையில் பணி புரியும் ஆற்றலை வளர்ப்போம். இது 2008ம் ஆண்டில் எங்கள் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும். எதிர்காலத்தில் பல வாகனங்களை வடிவமைத்து தயாரிப்போம். அந்தப் போக்கில், பணியாளர்களின் வாகனத் துறையிலான அறிவுகளை அதிகரிக்க வேண்டும்.
சாதனைகளை பெறும் அதே வேளையில், எவ்வாறு தொடரவல்ல வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும், maschgan கருதில் கொண்டு வருகிறார். FAW-VW குழுமம் விரைவாக வளர்ந்த போதிலும், மேலும் பல பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும். குறிப்பாக, புத்தாக்க சிந்தனையையும் திறனையும் மேம்படுத்த வேண்டும். அதற்காக, இளைஞர்களின் புத்தாக்க திறனை FAW-VW தொடர்ந்து வளர்க்கும்.
2004ம் ஆண்டின் ஜூன் திங்கள், FAW-VW, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வாகன ஒத்துழைப்பு தொழில் நிறுவனமாக மாறியது. இப்போட்டிக்காக, 5000 வாகனங்களை இது வினியோகிக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமல்ல, ஒரு வகையில் நம்மை தன்னைத் தாண்டி எழும் மாபெரும் எழுச்சியாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவியளிப்பது என்பது பற்றி குறிப்பிட்ட போது, maschgan இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சி மூலம், சமூக பொது நலப் பணிக்கு நிதி உதவியளிப்பது, FAW-VW பணியாளர்களை ஊக்கமளித்து உற்சாகமூட்டும். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, FAW-VW தொழில் நிறுவனத்தின் சிறந்த உருவத்தை வெளிப்படுத்த முடியும்.
இத்தொழில் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றி குறிப்பிடுகையில், machgan கூறியதாவது,
FAW, VW, AUDI ஆகிய தொழில் குழுமங்கள் நீண்டகாலமாக இணைந்து ஒத்துழைக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன்.
நீண்டகாலமாக changchunஇல் பணி புரிவதால், machgan இந்நகரையும் changchun FAWஐயும் நேசிப்பதாகவும் தாம் தெரிவித்தார்.
|