• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-02 09:24:09    
சீனாவிலுள்ள சிலி தூதரின் நல்வாழ்த்து

cri
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த முழு மனித குலத்தின் மாபெரும் விழா நடத்துவதற்கு வளரும் நாடுகள் திறமை கொள்கின்றன என்பதை சீனா உலகிடம் கோடிட்டுக்காட்டும். சீனாவிலுள்ள சிலி தூதர் Fernando Reyes Matta, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
வளரும் நாடான சீனா ஒலிம்பிக் விலையாட்டு போட்டியின் உபசரிப்புரிமையைப் பெற்ற நாளன்று முதல், மாபெரும் அறை கூவலை எதிர்நோக்கியுள்ளது. இருந்தாலும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீனாவின் முயற்சிகள் மிகவும் தெளிவானவை.

உலகிடம் தமது ஆற்றலை பெய்சிங் தொடர்ந்து கோடிட்டுக்காட்டியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடத்துவதில் சீனாவுக்கு திறமை உண்டு என்றார் அவர்.
விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என்று Matta கூறினார்.
வரலாறு, தற்போது மற்றும் எதிர்காலத்தில், விளையாட்டை அரசியலாக்குவது என்பது தவறாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, முழு மனித குலத்தின் மாபெரும் விழாவாகும். அரசியல் பிரச்சினைகள் அரசியல் துறையில் தீர்க்கப்பட வேண்டும். விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என்றார் அவர்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற

வேண்டுமென மெக்சிகோ உளமார விரும்புகின்றது. சீனாவிலுள்ள மெக்சிகோவின் தூதர் Guajardo, பெய்சிங்கில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முதலாவதாக நடைபெற்ற வளரும் நாடாக மெக்சிகோ மாறியது. தற்போது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா வரவேற்கின்றது என்று Guajardo சுட்டிக்காட்டினார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா நடத்துவதற்கு மெக்சிகோ ஆதரவு அளித்து வருகின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஒரு மாபெரும் விழாவாகும். சீன மக்களுடன் இணைந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நாங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவது மூலம், உலகிற்கு தனது சிறந்த புகழை சீனா எடுத்துக்காட்டலாம் என்று கூறிய Guajardo ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பெய்சிங்கின் ஆயத்த பணிகளை வெகுவாக பாராட்டினார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனா போதிய முன்னேற்பாட்டை சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.
சீன மொழி மூலம் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான நல்வாழ்த்துக்களை Guajardo தெரிவித்துள்ளார்.
பெய்சிங் மற்றும் சீனாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்றார் அவர்.