• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-02 13:05:57    
விபத்திற்குள்ளான ஹெலிகப்டர்

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்க பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஒன்றை தேடி கண்டறிய மீட்புதவியாளர்கள் இன்று முழு மூச்சுடன் முயற்சித்து வருகின்றனர். நோய் தடுப்பு நிபுணர்களை சிச்சுவான் மாநிலத்தின் லீ மாவட்டத்துக்கு அனுப்பி விட்டு திரும்பிய வழியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலரோடு வென்ச்சுவான் மாவட்டத்தின் யின் சியூ வட்டத்துக்கு அருகில் தாழ்வாக மிதிந்த மேகத்திலும் கடும் காற்றிலும் ஹெலிகாப்டர் திடீரென சிக்கிக் கொண்டது. மே 31ம் நாள் பிற்பகல் 2.56 மணிக்கு அது காணாமல் போயிற்று.
சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹுச்சின்தாவ் இச்சம்பவத்தை அறிந்ததுடன் அதை கண்டறிய ஆட்களை அணித்திரட்டுமாறு மத்திய இராணுவ ஆணையத்தின் துணைக் தலைவர் கோ பொ சியுங்கிற்கு அதிகாரம் வழங்கினார்.
பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ள 1240 படையினர்கள் 8 குழுக்களாக பிரித்து ஹெலிகப்டர் விபத்து நிழந்த இடத்தில் தேடுகின்ற அதேவேளை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் வான் வழியாகவும் தேடி வருகின்றனர்.
விபத்துக்குள்ளாக்கான ஹெலிகப்டரில் 5 விமானிகளும் 14 பொது மக்களும் மற்றும் தொடர்புடையர்களும் இருந்தனர்.