நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மின்னாற்றல் விநியோகம்
cri
சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மின்னாற்றல் விநியோகம் போதிய அளவில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. சீன அரசவை பேரிடர் நீக்க தலைமையகத்தின் அடிப்படை வசதிகளின் மறுசீரமைப்புப் பணிக்கான பொறுப்பாளரும் சீன தேசிய எரியாற்றல் ஆணையத்தின் தலைவருமான zhang guo bao இன்று செங் து நகரில் இதைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் நிலக்கரி, மின்னாற்றல், எண்ணெய் ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றும் வகையில், அரசவை சிறப்பு கூட்டம் நடத்தி தொடர்புடைய பணியை ஏற்பாடு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தவிர, தற்போது, சி ச்சுவானில் பெரும் பகுதி நிலக்கரி தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மீட்டெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
|
|