பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடிநீர் பாதுகாப்பு
cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பின், குடி நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று சீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் mao qun an இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மக்களின் குடிநீர் மீது கண்காணிப்பு மேற்கொள்வதுடன், நீர் வளங்களையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவரை, சி ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களிலும் மாவட்டங்களிலும் 85 விழுக்காட்டு நீர் விநியோகம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 57.5 இலட்சம் விவசாயிகளின் தற்காலிக குடிநீர் பிரச்சினை அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.
|
|