• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 16:24:19    
எட்டு புகழ்பெற்ற இடங்கள்(இ)

cri

Long quan பெண் துறவி மடம்

Long quan பெண் துறவி மடம், Long wang tang எனவும் அழைக்கப்படுகின்றது. அது, Da bei கோயிலின் வடமேற்கில் உள்ளது. அது, 1425ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. 1645ம் ஆண்டு, அங்கு ஒரு ஊற்றைக் கண்டறிந்த பின் துறவிகள், Long wang கோயிலைக் கட்டியமைத்தனர்.

Long quan பெண் துறவி மடத்தில், Long wang tang, Wo you ge, Ting quanshuixie, Miao xiangyuan, Hua zuyuan ஆகிய ஐந்து முற்றங்கள் உள்ளன. அனைத்து முற்றங்களிலும், உயரமான மரங்கள் இருக்கின்றன. கோடைக்காலத்தில், அங்கு குளிர்ச்சியாக இருப்பதை உணரலாம்.

இம்மடத்தின் முக்கிய வாயில், சிறியதாக இருக்கிறது. முற்றத்தில் நுழைந்ததுடன், உங்கள் கண்களின் முன்னால் ஒரு ஊற்று, dragonஇன் வாயிலிருந்து ஓடும் காட்சி காணப்படுகிறது. அது, Long quan ஊற்று என அழைக்கப்படுகிறது.

Xiang jie கோயில்

Xiang jie கோயில், Ping po மலையில் உள்ளது. அது, எட்டு புகழ்பெற்ற இடங்களில் மிகப் பெரிதானதாகும். அது, 758 முதல் 760ம் ஆண்டு வரையான காலத்தில், கட்டியமைக்கப்பட்டது.

அது, மலை குன்றின் மீது, கட்டியமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இதில், ஐந்து முற்றங்கள் உள்ளன.

Bao zhu குகை

Bao zhu குகை, Ping po மலையின் உச்சியில் உள்ளது. அது, 1780ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது.

அதற்கு முன், ஒரு மரத்துண்டுகளாலான மாளிகை இருக்கிறது. அதில், பேரரசர் ச்சியான் லோங் இயற்றிய சில எழுத்துக்கள் காணப்படுகின்றன.

அதன் இரண்டு மண்டபங்கள், செங்குத்தான பாறைக்கு நெருக்கமாக, கட்டியமைக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டபத்தின் பின் முற்றத்தில், ஒரு கல் குகை காணப்படுகின்றது. இக்குகைக்குள்ளே இருக்கும் கல், மணியைப் போல், பளபளப்பாக இருக்கிறது. அதனால், அது, சீன மொழிலில், Bao zhu என அழைக்கப்படுகிறது.

அது, பெய்ஜிங் மாநகரின் அழகான காட்சிகளையும், சூரிய உதயத்தையும் கண்டளிக்கக் கூடிய மிக அருமையான இடமாகும்.

 

Zheng guo கோயில்

Zheng guo கோயில், தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. அது, எட்டு புகழ்பெற்ற இடங்களில், மிகப் பழமையானதாக இருக்கிறது. அங்குள்ள ஒரு பழங்கால மரம், 600 வயதிற்கு மேற்பட்டதாகும்.