சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சாங்சுன் 3ம் நாள் முற்பகல், சிச்சுவான் மாநிலத்தின் dujiangyan நகரை பார்வையிட்டார். Erwangmiao கோயில் உள்ளிட்ட தொல் பொருட்களின் சீர்குலைவு நிலைமைகளைச் சோதனை செய்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் ஹூசிந்தாவ் அளித்த பொறுப்பை ஏற்று, அவர் ஜூன் முதல் நாள் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையைச் சோதனை செய்து, மக்கள், ஊழியர்கள், பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, தொடர்புடைய பணிகளுக்கு வழிகாட்டினார்.கடந்த சில நாட்களில், mianyang,pingwu,deyang போன்ற பிரதேசங்களில் அவர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையை பார்வையிட்டார்.
அப்பிரதேசங்களில் பணிபுரிகின்ற செய்தியாளர்களைச் சந்தித்தார். களத்தில் உள்ளஉண்மையான, வெளிப்படையான கொள்கைகளில் செய்தியாளர்கள் ஊன்றி நிற்க வேண்டும். பேரிடர் நீக்கப் பணி பன்முக வெற்றி பெறுவதற்கு புதிய பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
|