நிலநடுக்கத்தால் சில தொழிற்சாலைகள் மற்றும் சாதனங்கள் சீர்குலைக்கப்பட்ட போதிலும், பேரிடருக்கு அடுத்த 5வது நாள் உற்பத்தியை மீட்டெடுத்துள்ளன. J-10 FIGHTER, THUNDER DRANGON ஆகியவை உள்ளிட்ட முக்கிய விமானங்கள் இதில் அடங்குகிறன என்று சீன விமானப் பயணியர் சேவை தொழிற்துறையின் முதலாவது கூட்டு குழுமம் 2ம் நாள் தெரிவித்தது.
புள்ளிவிபரப்படி, சிச்சுவான் மாநிலத்தின் சுமார் 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டன. அதனால் 6 ஆயிரத்து 700 கோடி யுவான் மதிப்புள்ள நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இது வரை, சில தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மீட்டெடுத்துள்ளன. மே திங்கள் 27ம் நாள் வரை, சிச்சுவான் மாநிலத்தின் பங்கு பத்திரச் சந்தையில் நுழையும் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் செயல்பட துவங்கின.
|