| 
சர்வதேசச் சமூகத்தின் உதவி
 
 
 
cri
 
| கடந்த சில நாட்களில், சீன சிச்சுவான் நிலநடுக்கப் பேரழிவுக்குச் சர்வதேசச் சமூகம், நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. ஜப்பானிய அரசு, வழங்கிய முதலாவது தொகுதி 400 கூடாரங்கள், நேற்றிரவு, chen du சென்றடைந்தன. தவிர, அண்மையில், 800 கூடாரங்கள், சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்றிச் செல்லப்படும். பாகிஸ்தானின் காஷ்மீர் உள்ளூர் அரசு, நேற்று சிச்சுவானுக்கு சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலரையும் 1500 கூடாரங்களையும் வழங்கி உதவி செய்தது.இதை தவிர, லாவோஸ் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், கத்தார் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ஜார்ஜியா, ஸ்பெயின் செஞ்சிலுவை சங்கம், அமெரிக்க ஒலிம்பிக் குழு ஆகியவை, அண்மையில், சீனாவுக்கு தொகையையும், கூடாரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி உதவி செய்துள்ளன. |  |