• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 21:46:17    
சீனக் குடைகள் (அ)

cri
பொதுவாகவே சீனா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, மாபெரும் நாடு, மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு என்பதாக இருக்கும். ஒரு சிலருக்கு செந்நிறம், சீனப்பெருஞ்சுவர், சீனத்து பட்டு, தேயிலை, பீங்கான் முதலியவை நினைவுக்கு வரக்கூடும். இன்னும் சிலருக்கு, குங்ஃபூ, வூஷு போன்ற போர்க்கலைகள் நினைவுக்கு வரலாம். சரி, சீனா என்றதும் நம் மனக்கண்ணில் தோன்றுவது என்ன??

சீனாவில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு நிறைய விடயங்கள் கண்களில் காட்சியாய் விரியும். என்னை பொறுத்தவரை, நான் சீனாவை பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்கு முன் சீனா என்றதும் நினைவுக்கு வந்ததெல்லாம், சீனர்களில் கைகளில் உள்ள விசிறிகளும், குடைகளும் தான். அதைத் தொடர்ந்துதான் சீனப்பெருஞ்சுவர்.

வெயிலுக்கும், மழைக்கும் பாதுகாப்பாய் அமையும் குடையை கண்டுபிடித்தவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக குடையும் ஒரு சீன கண்டுபிடிப்பே என்று நம்பப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பட்டால் செய்யப்பட்ட குடைகள் பின், காகிதம், தாளில் செய்யப்பட்டனவாம். இந்தத் தாளில் மெழுகையும், எண்ணெயயையும் ஊற்றி வைத்தனர் சீனர். காரணம் தண்ணீர் எண்ணெயில் ஒட்டாது, ஊறாது என்பதால். பண்டைய சீனாவில் குடைகளின் கம்பிகள், ஆதரக்கோல் அல்லது ஈர்க்கு, கைப்பிடி முதலியவை மரத்துண்டுகள், மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்டன. அரச குடும்பத்தினர் செந்நிறம், மஞ்சள் நிறம் கொண்ட குடைகளையே பயன்படுத்தினர். இதர பொதுமக்கள், சாதாரண குடிமக்கள் நீல நிற குடையை பயன்படுத்தினர். முதலில் செய்யப்பட்ட குடைகள் மடக்க முடியாததாகத்தான் இருந்தன. அதாவது எப்போதும் குடை விரிந்த நிலையிலேயே இருந்தன. மடக்கக்கூடிய குடைகள் கூட 1700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடைகள் கொரியா வழியாக ஜப்பானுக்கும், பட்டுப்பாதை வழியாக இன்றைய ஈரான் அன்றைய பெர்ஷியாவுக்கும், மேற்குலகுக்கும் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

மேற்கில் பரவிய குடை

குடை என்பது ஆங்கிலத்தில் அம்பிரல்லா எனப்படும். இது லத்தீன் மொழியின் அம்ப்ரா என்ற சொல்லிலிருந்து உருவானது. அம்ப்ரா என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு நிழல் என்று பொருள். மேற்கத்திய நாடுகளில் குடைகள் பரவலாகத் தொடங்கியது 16ம் நூற்றாண்டு வாக்கில்தான்.

மாரியால் தொடர்ந்து நனைந்துகொண்டிருந்த வட ஐரோப்பியர்களிடையில் குடை வெகுவாக புகழ்பெறத் தொடங்கியதில் வியப்பேதுமில்லை. ஆனாலும் குடைகள் அக்காலத்தில் பெண்களுக்கான பல்வகை பொருட்களில், அழகு சாதனங்களில் ஒன்றாகவே கருதப்பட்டது.

பெர்ஷிய பயணியும், எழுத்தாளருமான ஜோனாஸ் ஹான்வே என்பவர் இங்கிலாந்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் குடையை எப்போதும் உடன் வைத்திருந்து பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. அவரே ஆண்களிடையே குடை பயன்பாட்டை பரவலாக்கியவர் என்று கூறுகின்றனர். 1830ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற கடைதான் குடைக்கான முதல் கடையாம்.