• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 22:48:56    
காய்கறி மருத்துவர்

cri

இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சிறப்பான மருத்துவர் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். காய்கறி நோய் ஆராயும் இவர் காய்கறி மருத்துவராக அழைக்கப்படுகின்றார். அயரா உழைப்பு முயற்சி ஆகியவற்றின் மூலம், தனது பல விவசாய நண்பர்கள் வளம் அடைவதற்கு உதவி அளித்தார். அவருடைய பெயர் ZHANG YAN XIANG.

இதோ, அவர் இணைய வீடியோ வசதி மூலம், விவசாயி ஒருவருடன் தொடர்பு கொள்கிறார்.

விவசாயி - ஆசிரியர் சாங், இதை பாருங்கள், இந்த மிளகாய்க்கு என்ன பிரச்சினை.

சாங் - இது சுண்ணாம்புச்சத்து குறைந்ததால் ஏற்பட்ட நோய்.

விவசாயி -- ஓ, அப்படியா, எந்த மருந்தைப் பயன்படுத்தலாம்?

சாங் - என்னால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட சுண்ணாம்பு மருந்தைப் பயன்படுத்தலாம்.

விவசாயி -- மிக்க நன்றி, ஆசிரியர் சாங்.

நீங்கள் கேட்டது, சாதாரண மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு உரையாடல் இல்லை. காய்கறி மருத்துவர் ZHANG YAN XIANG இணைய வீடியோ வசதி மூலம், விவசாயி ஒருவர் பயிரிடும் காய்கறிக்கு சிகிச்சை ஆலோசனை அளித்ததையே ஆகும். அவரது மருத்துவ நிலையம் கிழக்கு சீனாவின் சான் துங் மாநிலத்தின் சோ குவாங் நகரில் அமைந்துள்ளது. மிளகாய் நோய் பற்றி விசாரித்த விவசாயி, வடகிழக்கு சீனாவின் லியோ நிங் மாநிலத்தில் வாழ்கின்றார். இவ்விரண்டு இடங்களுக்கிடையில் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இருக்கின்றது.

இவ்வாண்டு 35 வயதான ZHANG YAN XIANG சோ குவாங் நகரின் கிராமப்புறத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே, அவரது தந்தை காலமானார். வீட்டில் உழைப்பாற்றல் குறைவு என்பதால், வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்தது. ஆண்டுதோறும் அரசிலிருந்து அவரது குடும்பம் உதவி தொகை பெற்றது.

1980ம் ஆண்டுகளின் இறுதியில், குளிர்காலத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்யாத வரலாறு முடிவடைந்தது. சோ குவாங் நகரில் மக்களின் முயற்சியினால்,  கூடாரம் போன்று மூடப்பட்ட இடத்தில் காய்கறி வகைகள் பியிரிடப்படதத் துவங்கின. பல விவசாயிகள் இதனால் செல்வம் அடைந்தனர். அதிக கல்வி பெறாத ZHANG YAN XIANG உம் காய்கறிகளைப் பயிரிடத் துவங்கினார். முதல் ஆண்டு, அவர் வளர்த்த தக்காளிப் பழம் திடீரென்று பூச்சிகளால் நாசப்பட்டது. பாதிக்கப்பட்டது. அனுபவம் இல்லாத அவருக்கு இத்தொல்லையை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பது ஒன்றும் தெரியாது. அவருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் தாக்கத்தால், காய்கறி பயிரிடும் தொழில் நுட்பத்தை ஆராய அவர் துவங்கினார். அவர் கூறியதாவது

உரை 2

காய்கறி பயிரிடுவது எளிதானதல்ல. இதற்குத் தொழில் நுட்பமும் அறிவும் தேவைப்படுகின்றன. இடைநிலை பள்ளியில் பயின்ற பாட நூலை ஆராய்ந்த பிறகு, ஆர்வம் அதிகரித்தது. லாய் யாங் வேளாண் கழகம், சான் துங் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பாட நூல்களைப் படித்து, தொடர்புடைய தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.

அடுத்த ஆண்டில், அவர் தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை பயிரிட்டார். தொழில் நுட்பம் கொண்ட அவர், அவ்வாண்டு அமோக அறுவடை பெற்றார். இதற்குப் பின், அவர் நடைமுறை பயிரிடுதலில் ஈடுபட்டதுடன் அது தொடர்பான மேலதிக அறிவைக் கற்றுக்கொண்டு வருகின்றார். தொடர்ந்து பல ஆண்டுகளாக நல்ல அறுவடை பெற்றுள்ளார். வாழ்க்கை நிலைமையும் மேம்பட்டுள்ளது. நடைமுறையில், காய்கறிகளில் பூச்சி தாக்குவதை சமாளிக்கும் சிகிச்சை தொழில் நுட்பத்தை அவர் கைப்பற்றியுள்ளார். உள்ளூர் அரசு அவருக்கு உயர் வேளாண் ஆசிரியர் என்ற புகழை வழங்கியது.

90ம் ஆண்டுகளில், கூடாரம் போன்ற மூடப்பட்ட இடத்தில்  காய்கறி வளர்ப்பது முழு நாட்டிலும் பரவலாக்கப்பட்டது. இத் தொழிலில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால், மூடப்பட்ட இடத்தில் காய்கறி வளர்ப்பதில் பூச்சி தடுப்பு சிகிச்சை தொழில் நுட்பம் ஒப்பீட்டளவில் குறைவு, பரவலாக்கப்படவில்லை. வேளாண் தொழில் நுட்ப திறமைசாலிகள் வேளாண் தொழிலுக்குச் சேவை புரிவதற்கு அரசு ஊக்கமளிக்கின்றது. இதிலிருந்து zhang yan xiang வணிக வாய்ப்பைக் கண்டுப்பிடித்தார்.

2002ம் ஆண்டு, உள்ளூர் அரசின் உதவி மற்றும் ஆதரவுடன், zhang yan xiang ,சோ குவாங் நகரில் முதலாவது காய்கறி மருத்துவ நிலையத்தைத் திறந்து வைத்தார். பல விவசாயிகள் இங்கே வந்து உதவி கேட்கின்றனர். அவர்களில் பலர் நூறு கிலோமீட்டர் தூரம் அப்பாலுள்ள பிரதேசங்களிலிருந்து வருகின்றனர். fu xue liang எனும் விவசாயி கடந்த சில ஆண்டுகளாக zhang yan xiang இடமிருந்து காய்கறி நோய் தடுப்பு வழிமுறையைக் கற்றுக்கொண்டு வருகின்றார். மருத்துவர் சாங்கிற்கு நன்றி தெரிவித்து அவர் கூறியதாவது

உரை 3

மருத்துவர் சாங்கின் மருத்துவ நிலையம் எங்களுக்கு பெரும் உதவி அளிக்கின்றது. காய்கறி பயிரிடுவதில் எந்த பிரச்சினை இருந்தாலும், இங்கே வந்து தீர்வு வழிமுறையை பெறலாம். மிகவும் வசதியானது. தற்போது, காய்கறியின் தரமும் உற்பத்தி அளவும் உயர்ந்துள்ளது. விற்பனை தொகையும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

2004ம் ஆண்டு, சோ குவாங் நகரில் காய்கறி பூச்சி தடுப்பு மற்றும் சிகிச்சைச் சங்கம் நிறுவப்பட்டது. zhang yan xiang இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ம் ஆண்டு, சான் துங் மாநில வேளாண் துறை ஒதுக்கிய ஒரு இலட்சம் யுவானைப் பயன்படுத்தி, zhang yan xiang கணிணி, நுண்மோக்கி, வீடியோ படக் கருவி ஆகிய வசதிகளை வாங்கி, தொலை காய்கறி சிகிச்சை தொகுதியை திறந்து வைத்தார். முழு நாட்டிலும் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி நோய்க்கான சிகிச்சை அளிக்க துவங்கினார். அவர் கூறியதாவது

கடும் காய்கறி நோய் பற்றி ஆராய்கின்றோம். தொடர்புடைய தொழில் நுட்பம் எங்களுக்கு உண்டு. liao ning, shan xi, he nan, he bei, gansu ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி வளர்ப்பு பற்றிய தொழில் நுட்பம் குறைவு. இந்தத் தொகுதி மூலம், அங்கு காய்கறி நோய்க்கான சிகிச்சையை அளித்து, பொது மக்களின் இழப்பை கூடிய அளவில் மீட்கப் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், சான் துங் மாநில அரசு கிராமப்புறக் கட்டுமானத்திலும் வேளாண் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றது. வேளாண் தொழில் நுட்பத் திறமைசாலி பயிற்சியில் உள்ளூர் அரசுகளும் மிகவும் கவனம் செலுத்துகின்றன. zhang yan xiang போன்ற புதிய ரக விவசாயிகள், உள்ளூர் முன் மாதிரிகளாக மாறியுள்ளனர். கிராம நடைமுறை தொழில் நுட்பக் கொண்ட தலைசிறந்த திறமைசாலி என்ற புகழை அவர் பெற்றார். தவிர, அரசால், வேளாண் தொழில் நுட்ப ஆலோசகராக அமர்த்தப்பட்டார். zhang yan xiang கூறியதாவது

அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், செல்வம் அடையும் பாதையில் நடை போடலாம். அறிவியல் தொழில் நுட்பமும், அறிவும் வாழ்க்கையை மாற்றலாம். அறிவியல் தொழில் நுட்பத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நான் ஒரு பாலமாக மாற விரும்புகின்றேன் என்றார் அவர்.

நோய் ஆராயும் இவர் காய்கறி மருத்துவராக அழைக்கப்படுகின்றார். அயரா உழைப்பு முயற்சி ஆகியவற்றின் மூலம், தனது பல விவசாய நண்பர்கள் வளம் அடைவதற்கு உதவி அளித்தார். அவருடைய பெயர் ZHANG YAN XIANG.