• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 09:03:58    
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆறுதல்கள்

cri
கலை: சிச்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்க தாக்கத்திலிருந்து சீன மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்கப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
......முதலில் நேயர்களிடமிருந்து பெற்றுள்ள ஆறுதல் மற்றும் அனுதாப ஒலியை கேளுங்கள்....ஊத்தங்கறை கிருஷ்ணகிரி கவி செங்குட்டுவன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
........அடுத்து மூன்ற் நேயர்கள் ஒரே நேரத்தில் பேட்டி யளித்து தெரிவித்த ஆறுதலை கேளுங்கள். ஈரோடு க ராகம் பழனியப்பன், ஓடைக் கத்தூர் ராமசாமி, பகளாயூர் பி.ஏ.நாசிமுத்து ஆகியோராவர்.
.......தொடர்ந்து பாண்டிசேரி என் வசந்தி தெரிவித்த ஆறுதலை கேளுங்கள்........
……யாழ்பாணம், ஈசன்……
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்திகளை அறிந்தோம்.
நில நடுக்கம் ஏற்பட்டதும் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் முக்கிய கட்டளையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் உயிரை பாதுகாக்கவும், காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் கோரினார். சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் நில நடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று பேரிடர் நீக்கப் பணிக்கு தலைமை தாங்கினார் என்பதை அறிந்து சீன அரசின் உடனடி நடவடிக்கைகளை எண்ணி ஆறுதல் அடைந்தோம். இயற்கை சீற்றம் எப்போது, எங்கே நிகழுமென்று யார் அறிவார்? இலங்கை மக்கள் சார்பில் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

…….காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன்…….
சிச்சுவான் மாநிலத்தில் வென்ச்சுவான் மாவட்டத்தில் ரிக்டர் அளவையில் 8 ஆக பதிவான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரம் உயிர்கள் பலியான சோகம் என் கண்களளில் நீர் வரவழைத்தது. சீன மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் மற்றும் அனுதாபங்கள்.
அமெரிக்கா, ஆல்பர்ட் பெர்ணான்டோ
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சென்றடைந்து, தலைமையமைச்சர் வென்சியாபாவ் மற்றும் இதர தலைவர்களுடன் கூட்டம் நடத்தி, மீட்புதவிப்பணிகளை கூட்டாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க ஊக்குவித்த செய்தியறிந்து மகிழ்ந்தோம். உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவையான செயல் இது. அவர்கள் ஆறுதல் யாரும் சொல்லமாட்டார்களா? என்ற நிற்கும் நிலையில்லாமல் அரசுத்தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறியது அவர்களுக்கு இழந்ததைப் பெற்ற உணர்வு ஏற்படுத்தியிருக்கும். இது மிகவும் பாராட்டுக்குரிய,போற்றுதலுக்குரிய செயல்.
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்,
சீன வானொலி தமிழ்ப்பிரிவின் இணையத்தை வழக்கம் போல பார்வையிட்டபோது, அதில் •இணையத்தின் மூலம் செய்தியாளர் கூட்டம்• என்ற புதிய பகுதியைக் கண்டேன். உடனடியாக என்னுடைய கருத்துக்களை அதில் பதிவு செய்தேன். இது ஒரு சிறப்பான முயற்சி. இத்தகைய நடவடிக்கைகள், நேயர்களின் கருத்துக்களை உடனடியாக அறியச் செய்யும். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான வாழ்த்து என்ற பகுதியிலும் என் வாழ்த்து வாசகங்களை பதிவு செய்துள்ளேன்.
முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர்
சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலம் சென்று அங்குள்ள பணியாளர்கள், பொது மக்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, நிலநடுக்கப் மீட்புப் பணியின் முன்னணியில் ஈடுபடும் படை அதிகாரிகள், வீரர்கள், காவல்துறையினர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து, மீட்புப் பணிக்கு வழிகாட்டினார், என்ப‌தை அறிந்தேன். பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அவர் கூறிய‌ ஆறுத‌ல் வார்த்தைகள் தெம்பினை அளித்திருக்கும் என‌ எண்ணுகிறேன்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
சிச்சுவான் நிலநடுக்கத்தால் உயிரழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாய் சீன அரசு மே திங்கள் 19 முதல் 21ம் நாள் வரை, இரங்கல் தெரிவிக்கும் நாட்களாக முடிவு செய்தது. இம்மூன்று நாட்களில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சீனாவிலும், வெளிநாட்டிலும்,

சீனாவின் பல்வேறு வாரியங்களிலும், தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதோடு, பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்தன. ஆயிரக்கணக்கான பெய்சிங் நகரவாசிகள் ஒன்று சேர்ந்து தியான் ஆன் மன் சதுக்கத்தில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். இவற்றையெல்லாம் அறிந்தபோது எனது நெஞ்சம் நெகிழ்ந்துபோனது. நமது நேயர்களிடம் ஒலிப்பதிவு செய்த சிச்சுவான் நிலநடுக்கம் பற்றிய கருத்துக்கள் மனதை மெல்ல வருடின. இக்கொடுமையான நிலநடுக்கம் போல் இனி உலகில் எங்கும் நடக்கக் கூடாது. எனது ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் சீன மக்களூக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டி, S.K.சுரேந்திரன்
அன்மையில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட கடும்
நிலநடுக்கத்தில் பல ஆயிரம் ம்க்கள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்ட எங்கள் உடன் பிறவா சகோதர,சகோதரிகளுக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். இருந்த போதிலும் சீன அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களின் மீட்புப் பணி பற்றிய நடவடிக்கைகளில் பக்குவமான மனப்பான்மையுடன் செயல்பட்டதை பற்றி சீன வானொலி மூலம் அறிந்து ஆறுதல் அடைந்தேன்.
க்ளீட்டஸ்: மறுபுறத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் திங்களில் அகிலத் திருவிழாவாம் ஒலிம்பிக் போட்டியை உலகம் வியக்கும் உன்னத ஒலிம்பிக் போட்டியாக நடத்திக்காட்டும் உறுதியை ஊக்கமாக்கி சீன மக்கள் ஆக்கப்பூர்வமாய் செயல்படுகின்றனர்.
......திருச்சி அண்ணாநகர் வி.தி. இரவிச்சந்திரன் ஒலிம்பிக் வெர்றிகரமாக நடைபெறுவதற்கான வாழ்த்தை கேளுங்கள்.......
கலை: புதிய நேயர் வெண்ணந்தூர் ஆர். ஜி. கோபி எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். சீன நாட்டின் வரலாறு, பண்பாடு, மக்களின் வாழ்க்கை முதலியவை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, பாரம்பரிய அம்சங்கள் இவை கவர்ந்திழுக்கக்கூடியவை. செய்திகள், செய்தித்தொகுப்புகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
க்ளீட்டஸ்: திருவானைக்காவல் ஜி. சக்ரபாணி எழுதிய கடிதம். விளையாட்டுச் செய்திகளில் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியான பாராலிம்பிக் போட்டிக்கு உதவ விண்ணப்பித்த தன்னார்வத் தொண்டர்களின் பட்டியல் பற்றி அறிந்தேன். சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் திபெத் இன ஆயர் குடும்பங்கள் பற்றி கூறப்பட்டது. நாடோடி வாழ்க்கை நடத்தும் ஆயர் மக்களுக்கான அரசின் உதவி, ஆயர்களின் வாழ்க்கையில் சின்ஹாய் ஏரியின் பங்கு ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
கலை: அடுத்து பெரியவளையம் கி. ரவிச்சந்திரன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் அரபு நாடுகளில் பெரும் விழுக்காட்டினர் படிக்காதவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 15லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அறிந்தேன். வேதனையான செய்தி. மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்சி பெற்றோருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்யும் அந்நாட்டு அரசின் முயற்சிகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது.

க்ளீட்டஸ்: பாலக்காடு டி.வி. ராமசுவாமி எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் பாதுகாப்பு சட்டதிருத்தம் என்ற கட்டுரையை கேட்டேன். 8 கோடிக்கு அதிகமான ஊனமுற்றோரின் கல்வி, வேலை, உரிமை, லட்சியம், வாழ்க்கை நிலைமை ஆகியவற்றின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. ஊனமுற்றோரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த பாடுபடும் சீன அரசின் முயற்சிகளை பாராட்டுகிறேன்.
கலை: அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி உத்திரக்குடி கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். சீனப் பாரம்பரிய மருத்துவ முறைகளை பற்றி வாணி அவர்கள் எடுத்துக் கூறினார். நோய்களை குணமாக்க அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம், மசாஜ் ஆகிய வகைகளில், பக்கவிளைவுகள் ஏதுமின்றி சிறப்புடன் சிகிச்சையளிக்கும் சீனப் பாரம்பரிய மருத்துவம் அதிசயமானது. இத்தகைய அதிசயங்களில் சீனத்திற்கு ஈடு வேறொன்றுமில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
க்ளீட்டஸ்: உடையாம்புளி எஸ். ஆறுமுகநயினார் எழுதிய கடிதம். எமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து பல லட்சம் நேயர்களை சீன வானொலி சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழியிலேயே சீன மொழியை அறிமுகம் செய்யும், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு வருகிறேன். சீன மொழியைக் கற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. என்றாலும், ஓரிரு வார்த்தைகளை கற்று வருகிறேன்.
கலை: அடுத்து, அடியக்கமங்கலம் எம். எஸ். பஷீர் அஹமது எழுதிய கடிதம். சீன தேசிய பேரவையின் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் போது எரியாற்றலை சிக்கனப்படுத்தி, பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து அனைவரும் பேசியதை அறிந்து மகிழ்ந்தேன். திங்களுக்கு ஒரு நாள் தன்நபர்கள் தங்களது வாகனங்களை ஓட்டாமல் இருக்கவேண்டும் என்ற ஒரு பெண்மணியின் முன்மொழிவை கேட்டபோது சீன மக்கள் அனைவருமே எரியாற்றலை குறைத்து பசுங்கூட வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர் என்று அறிய முடிந்தது.