• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 17:48:28    
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதியான வசிப்பிட நிலையை உத்தரவாதம் செய்வது

cri

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டது தவிர, பல பொது மக்கள் வீடுவாசலின்றி அல்லல்படுகின்றனர். சீன அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்களை வழங்கி, தற்காலிக வசிப்பிடங்களை ஏற்பாடு செய்த போதிலும், அவர்களின் வசிப்பிட நிலை மனநிறைவு தர முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் யதார்த்த இன்னல்களை தீர்ப்பதற்காக, அடுத்த 3 திங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15இலட்சம் இடைக்கால வீடுகளை கட்டியமைத்து தரும் என்று சீன அரசு அண்மையில் வாக்குறுதி அளித்துள்ளது.

இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 1கோடியே 50லட்சத்துக்கும் அதிகமானோர் அவசரமாக குடியமர்த்தப்பட்டனர். அவர்களின் வசிப்பிட நிலையை மேம்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பல தொகுதி கூடாரங்களைவழங்குவது மட்டுமல்ல, குவாங்துங், ஹெப்பெய், பெய்சிங் உள்ளிட்ட 21 பிரதேசங்கள், சிச்சுவான், கான் சூ, ஷான்சி முதலிய கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவியளிக்கும்.

உதவி அளிக்கும் மேற்கூறிய மாநிலங்களும் மாநகரங்களும், இடைக்கால வீட்டு வசதி பொருட்களுக்கான உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பொருத்தல் சேவை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இது தவிர, நிலநடுக்கம், தீ, கடும் காற்று, மழை, குளிர் ஆகியவற்றை தடுக்கும் திறன் கொண்டவையாக இடைக்கால வீட்டு வசதி பொருட்கள் இருத்தல் வேண்டும். பயன்பாட்டு காலம் 3 ஆண்டுகளுக்கு மேலாக அமையவேண்டும் என்று சீன அரசு கோரியது. தவிரவும், சீன வீடமைப்பு மற்றும் நகர-கிராமப்புற கட்டுமான அமைச்சகம் வெளியிட்ட தொடர்புடைய ஆவணங்களில், இடைக்கால வீடுகளுக்கான இடத் தெரிவு, கட்டுமான வரையறை, தொடர்புடைய அடிப்படை வசதிகள் முதலிவை பற்றி, நடைமுறைக்கு உகந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அண்மையில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் ஹெபெய் மாநிலத்தின் Lang Fang நகருக்குச் சென்று, அங்கே இடைக்கால வீட்டு வசதி பொருட்களின் உற்பத்தி நிலைமையைச் சோதனை செய்தார். ஒரு உள்ளூர் தொழில் நிறுவனம் 6000 இடைக்கால வீட்டு வசதி பொருட்களின் உற்பத்தி மற்றும் பொருத்தும் கடமைக்கு பொறுப்பேற்றுள்ளது. இத்தொழில் நிறுவனத்தின் பணியாளர்களிடம் ஹு சிந்தாவ் கூறியதாவது:

தற்போது, பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவதே பேரிடர் நீக்கப் பணியில் மிக முக்கிய கடமையாக மாறியுள்ளது. தற்காலிக வீடுகள் குறைவு என்பது தற்போது நாம் எதிர்நோக்குகின்ற மிகப் பெரிய இன்னலாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக புதிய வீடுகளில் வசிப்பதற்கு, மேலதிக இடைக்கால வீட்டு வசதி பொருட்களை செவ்வனே செய்து, பொருத்தி நமது கடமையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார் ஹு சிந்தாவ்.

Shan Dong மாநிலத்தின் Yan Tai நகரிலுள்ள இடைக்கால வீட்டு வசதி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பணித்தளத்தின் பொறுப்பாளர் Li Changzhi என்பவர் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்காற்றுவதற்காக, தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இடைக்கால வீட்டு வசதி பொருட்களை வழங்கும் கடமையை பெய்சிங் மாநகரும் ஏற்றுக்கொண்டது. சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட Jiang You நகரில் 70ஆயிரம் பேர் குடியமர்த்தப்படக்கூடிய இடைக்கால வீட்டு வசதி பொருட்களை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டப்பணி, இக்கடமையாகும். மனித முதன்மை என்ற மதிப்பு கருத்தில், ஒலிம்பிக் கட்டுமானத்தில் பெற்றுள்ள அனுபவங்கள் உள்ளிட்ட பல புதிய சாதனைகள் இத்திட்டப்பணியில் பயன்படுத்தப்படும் என்று பெய்சிங் கட்டுமான ஆணையத்தின் தலைவர் Sui Zhenjiang தெரிவித்தார்.

பல்வேறு தரப்புகளின் முயற்சிகள் மூலம், மேலும் கூடுதலான இடைக்கால வீட்டு வசதி பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டன. புள்ளி விபரங்களின் படி, ஜு முதல் நாள் வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 11ஆயிரத்துக்கு மேலான இடைக்கால வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இடைக்கால வீடுகளின் நிலையையும் திறனையும் சீன அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.