சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த 89 குழந்தைகளும் 16 ஆசிரியார்களும் நேற்று சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹாய்நான் மாநிலத்தின் சான் யா நகரை சென்றடைந்தனர். அவர்கள் 15 நாள் உள நல சிகிச்சை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் ஹாய் நான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்வதோடு, உளவியல் நிபுணர்களின் உள நல மீட்புதவிகளையும் பெறுவர்.
தவிர, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த 20 மாணவர்கள் வரும் 16ம் நாள் ரஷியாவின் ச்செல்யாபின்ஸ்க் நகருக்கு சென்று உள நல சிகிச்சையை பெறுவர் என்று ரஷிய இடார்-டாஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த திங்கள் 23ம் நாள், சீனாவில் பயணம் மேற்கொண்ட ரஷிய அரசுத் தலைவர் திமித்ரி மெத்வெதிவ் சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, ரஷியாவில் உள நல சிகிச்சை பெறுமாறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான துவக்க மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|