பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று ஹு நான் மாநிலத்தின் யுயெ யாங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. தீபத் தொடரோட்டத்தின் துவக்கத்து முன்பாக, இதில் கலந்து கொண்ட அனைவரும் வென்ச்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இத்தொடரோட்டத்தில் 205 தீபம் ஏந்தும் நபர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவின் கலப்பு நெல் தந்தை என்று அழைக்கப்படும் சீன பொறியியல் கழகத்தைச் சேர்ந்த மூத்த அறிஞர் யுவன் லோங் பிங், முதலில் தீபத்தை ஏந்தினார்.
இனிமேல், பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் சாங் ஷா, சியாங் டாங், சௌ ஷான் ஆகியவற்றில் நடைபெறும்.
|