இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், சீன ஹூ நான் மாநிலத்தின் ச்சாங் ஷா நகரில் நடைபெற்றது.
காலை 8:12 மணிக்கு, தீபம் ஏந்தும் முதலாவது நபரான, சிட்னி ஒலிம்பிக்கில் நீர் குதிப்புப் போட்டியில் முதலிடம் பெற்ற சீன விளையாட்டு வீரர் Xiong Ni, Ai wan ஓய்வு மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைத் துவக்கினார். அதில், 206 தீபம் ஏந்தும் நபர்கள் கலந்து கொண்டனர். கடைசியில், ஒலிம்பிக் தீபம், He long விளையாட்டு மையத்தின் விளையாட்டரங்கத்தை எட்டியது. அது, 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், 20.8 கிலோமீட்டராகும்.

துவக்க விழாவுக்கு முன், தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் கலந்து கொண்ட அனைவரும், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவானில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் உயரிழந்தோருக்கு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நாளை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஹூ நான் மாநிலத்தின் Xiang tan மற்றும் ஷௌ ஷான் நகரங்களில் நடைபெறவுள்ளது.
|