• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 19:19:21    
சீனாவின் உஸ்பெக் இனம்

cri

சீனாவின் உஸ்பெக் இன மக்கள், சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் yining, tachang, kashi, wulumuqi முதலிய இடங்களில் வாழ்கின்றனர். அதன் மக்கள் தொகை, 14 ஆயிரத்து 500க்கு மேலாகும். முற்காலத்திலிருந்தே அவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்தனர். 15ம் நூற்றாண்டில் படிபடியாக ஒரு தேசிய இனமாக மாறினர். 16ம் நூற்றாண்டில், அவர்கள் பழங்காலத்தின் பாட்டுப் பாதையின் வாயிலாக, சிங்கியாங் கடந்து உட்புறப் பிரதேசங்களில் வணிகம் செய்து, சிங்கியாங்கில் வாழ தொடங்கினர்.

உஸ்பெக் இனத்துக்கு, சொந்த மொழி உண்டு. அது Altic மொழி குடும்பத்தின் tujue கிளையைச் சேர்ந்தது. அது உய்கூர் இன மொழியைப் போன்றது. தற்போது உஸ்பெக் இன மக்கள், பொதுவாக, உய்கூர் அல்லது ஹசாக் மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள், இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள்.

உஸ்பெக் இனத்தின் நாட்டுப்புற இலக்கியம் செழிப்பானது. paerhadeஉம் xilinஉம் என்ற காவியம் போன்ற இலக்கிய படைப்புகள், பரந்தளவில் காணப்படுகின்றன. முக்கோண வடிவமைப்பிலான xiegenai என்ற இசை கருவி, அவ்வினத்தின் சிறப்புமிக்க இசை கருவியாகும்.

 

உஸ்பெக் இன மக்களில் பெரும்பாலானோர், வணிகத்திலும் கைவினை தொழிலிலும் ஈடுபடுகின்றனர். சிங்கியாங்கின் வட பகுதியில் வசிக்கின்ற சிலர், கால்நடை வளர்ப்பை தொழிலாக கொண்டுள்ளனர்.

உஸ்பெக் இனத்தின் பாரம்பரிய விழாக்கள், உள்ளூர் இஸ்லாம் மதத்தை நம்புகின்ற இனத்தின் விழாக்களைப் போலவே இருக்கின்றன. rouzi விழாவும், guerbang விழாவும் மிக பிரமாண்டமான விழாக்களாகும். rouzi விழாவுக்கு முன், வயது வந்தோர் நோன்பு இருக்க வேண்டும். உபவாசம் முடிந்த பின், உறவினர்களும் அண்டைவீட்டுக்காரரும் பரஸ்பர அழைப்பு அனுப்புவர். அவ்வாறு வருந்தினர்களுக்கு விருந்தளிப்பது வழக்கமாக உள்ளது.