• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 15:00:18    
தன்னலமின்றி மாணவர்களைப் பாதுகாக்கும் ஆசிரியர்கள்

cri
மே திங்கள் 12ஆம் நாள் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சி சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது முதல், பாதிக்கப்பட்ட மக்களின் தற்காப்பு மீட்புதவி மற்றும் பரஸ்பர மீட்புதவி தொடர்பான செயல்கள் சீனா முழுவதையும் மனமுருகச் செய்துள்ளன. இக்கட்டுரையில், நிலநடுக்கம் நிகழ்ந்த போது ஆசிரியர்கள் சிலர் தங்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மாணவர்களைக் காப்பாற்றிய நற்செயல்களை பற்றி உங்களுக்கு கூறுகின்றோம்.

மே திங்கள் 12ஆம் நாள் பிற்பகல் 2 : 28 மணிக்கு, சிச்சுவான் மாநிலத்து பெய் சுவான் மாவட்டத்தின் ஹாய் குவாங் கிராமத்தில், நன்கொடை கொண்டு கட்டப்பட்ட லியூ ஹான் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த 483 மாணவர்கள் நண்பகல் ஓய்வு முடித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் 2 மாடி கட்டிடத்திலுள்ள வகுப்பறைகளில் தூக்கக் கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர். திடீரென நிலநடுக்கம் நிகழ்ந்தது. "நிலநடுக்கம்" என்று ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டு, வகுப்பறைகளிலுள்ள மாணவர்களை விளையாட்டுத் திடலை நோக்கி ஓடுமாறு கோரினர். 10க்கு மேற்பட்ட வினாடிகளுக்குப் பின், நிலநடுக்கம் மிகவும் தீவிரமடைந்தது. பள்ளிக்கு வெளியேயுள்ள சில வீடுகள் இடிந்து விழுந்தன. விளையாட்டுத் திடலின் மையத்தில் ஆசிரியர்களால் பாதுகாக்கப்பட்ட மாணவர்களில் சிலர் கடும் நடுக்கத்தினால் தரையில் குப்புறப்படுத்திருந்தனர். ஆசிரியர்களில் சிலர் நில அதிர்வுகளின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், அசைந்தாடிக் கொண்டிருந்த கட்டிடத்துக்குத் திரும்பி, அறை அறையாக மாணவர்களைத் தேடி, அவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

நில அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், அப்பள்ளியின் நிர்வாகப் பிரிவுத் தலைவர் சியௌ சியௌ சுவான், ஆசிரியர்களுடன் சேர்ந்து, எதிர் பக்கத்திலுள்ள மலைக்கு உயிர்த் தப்பிச் செல்ல அனைத்து மாணவர்களையும் அழைத்துச் சென்றனார். நிலநடுக்கத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்பதில் அவர் மன நிம்மதி அடைந்தார். அன்று பிற்பகல் மாணவர்களின் பெற்றோர் அடுத்தடுத்து தங்களது குழந்தைகளை தம்மோடு அழைத்து சென்றனர். ஆனால், 71 மாணவர்களின் பெற்றோர் வரவில்லை.

அடுத்த நாள் காலை, அந்த மாணவர்களை முழு இரவும் பராமரித்த 9 ஆசிரியர்கள் சிறு கூட்டம் நடத்தினர். அந்த மாணவர்களின் பாதுகாப்புக்காக, கூடிய விரைவில் நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

இவ்வாறுதான், 9 ஆசிரியர்கள் 71 மாணவர்களை அழைத்துக் கொண்டு, உயிர் தப்பி செல்லும் பாதையில் நடை போட்டனர். நூறு கிலோமீட்டருக்கு மேலான தூரம் கடினமான நடைப் பயணம் செய்த அவர்கள், இறுதியில் மீட்புப் பணியாளரின் உதவியுடன், மியான் யாங் நகரத்தின் யீங் சை இடை நிலைப் பள்ளியைச் சென்றடைந்தனர். அந்த 71 மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், மேற்கூறிய 9 ஆசிரியர்களில் 4 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தனர் என்று தெரிந்து கொண்டனர். மே 19ஆம் நாள் வரை, இதர 5 ஆசிரியர்களின் குடும்பத்தினர் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

மக்கள் மனதை உருகச் செய்யும் ஒரேமாதிரியான கதை, து ஜியாங் யான் நகரின் ஜு யுவான் இடை நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. மே 12ஆம் நாள் பிற்பகல், இப்பள்ளியைச் சேர்ந்த இளம் ஆசிரியர் பூ பின், கீழ் தளத்திலிருந்த வகுப்பறையில், வழக்கம் போல் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நிலநடுக்கம் நிகழ்ந்த போது, அவர் நின்ற இடம், பாதுகாப்பான பகுதியிலிருந்து 2 மீட்டர் தூரத்தில் மட்டுமே இருந்தது. அவருக்கு உயிர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் தமது பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், மாணவர்கள் வெளியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.

ஆசிரியர் பூவின் முயற்சியில், வகுப்பறையிலுள்ள 76 மாணவர்களில் 56 பேர் உயிர் தப்பி பிழைத்தனர். ஆனால் அவர் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியவில்லை. மாணவர்களைப் பாதுகாக்க, 28 வயதான அவர் தனது இன்னுயிரை தியாகம் செய்தார். இடிபாடுகளில் புதைந்த அவரது பூதவுடல் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவரின் உடலுக்கு கீழ் உயிரிழந்த சில மாணவர்களின் பூதவுடல்கள் காணப்பட்டன.

ஆசிரியர் பூவினால் காப்பாற்றப்பட்ட மாணவர்கள், தியாகம் செய்த இந்த ஆசிரியர் பற்றிக் குறிப்பிட்டதும் மனவருத்தம் அடைந்து கண்ணீர் வடித்தனர்.

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மட்டுமல்ல, பூ பின்னின் மனைவியும் தாயும் ஆழ்ந்த வேதனை அடைந்தனர். பூ பின்னின் குடும்பத்தில் 13 பேர் ஆசிரியராக வேலை செய்தனர். இத்தகைய குடும்பத்தில் ஒருவரான பூ பின்னின் தாய் பேசுகையில், தனது மகனை நினைத்து பெருமையடைவதாக கூறினார்.