• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 09:47:31    
சீனாவிலுள்ள இஸ்ரேல் தூதரின் கருத்து

cri
சீனா, நடைபெற உள்ள 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை உலகில் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக மாறும். சீனாவிலுள்ள இஸ்ரேல் தூதர் Nadai, பெய்சிங்கில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த

போது, இவ்வாறு தெரிவித்தார். சீனாவைப் பொறுத்த வரை, 2008ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இவ்வாண்டில், சீனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும். அப்போட்டி, வரலாற்றில் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக அமையும் என்றார் அவர்.
இஸ்ரேல் மக்கள் சீனாவை அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாகும். உபசரிப்பு நாடான சீனா இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மக்கள் வியப்படைவார்கள் என்று Nadai கூறினார்.

இஸ்ரேல் அனுப்பும் சுமார் 40 வீரர்கள் இடம்பெறும் பிரதிநிதிக்குழு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலின் தலைசிறந்த வீரர்களை அனுப்ப நாங்கள் விரும்புகின்றோம் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் பதக்கங்களைப் பெறுவது சிறந்த நிகழ்ச்சியாகும். ஆனால், சர்வதேச நட்பைப் பரவல் செய்வது என்பது ஒலிம்பிக் எழுச்சியின் முக்கியான நோக்கமாகும் என்று Nadai கூறினார். தலைசிறந்த வீரர்கள் மற்றும்

சர்வதேச நட்பைப் பரவல் செய்வது என்பது ஒலிம்பிக் எழுச்சியின் முக்கியான இரண்டு பகுதிகளாகும். கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்த இரு பகுதிகளும் நனவாக்கப்பட விரும்புகின்றேன் என்றார் அவர்.