• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 18:23:08    
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட காயமுற்றவருக்கான ஏற்பாடு

cri
சி ச்ச்வானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 3 இலட்சம் பேர் காயமுற்றனர். பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் மருத்துவ மூலவளத்துக்கு இது மாபெரும் நிர்பந்தத்தை அளித்துள்ளது. அவர்களுக்கு மேலும் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், காயமுற்றவர்கள் சிலரை சி ச்சுவானை தவிர்த்த பிற இடங்களுக்கு கொண்டு செல்ல சீன அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான காயமுற்றோர் பல்வேறு பிரதேசங்களின் மருத்துவமனைகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உரிய சிகிச்சையை பெற்றுள்ளனர்.
காயமுற்றவருக்கான சிகிச்சைப் பணியில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. அவர்களுக்கு உரிய பயனுள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ கட்டணத்தை நீக்குவதென்ற கொள்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
வடக்கு சீனாவிலுள்ள ஹெ பெய் மாநிலத்தின் shi jia zhuang நகரில், 6 மருத்துவமனைகளில் காயமுற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதார பணியகத்தின் தலைவர் yang jian xin கூறினார். அவர் கூறியதாவது
இந்த 6 மருத்துவமனைகள் எமது மாநிலத்தில் தலைசிறந்த மருத்துவமனைகளாகும். காயங்களின் நிலைமைக்கிணங்க, காயமுற்றவர்கள் வேறுபட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர். எமது தலைசிறந்த மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த காய்முற்றோர் சிறப்பாக கவனித்து சிகிச்சை அளிப்பர். ஹெ பெய் மாநிலமும் அவர்களது குடும்பமாகும். குடும்பத்தினராக அவர்களை அணுகுகின்றோம் என்றார் அவர்.
பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட காயமுற்றோர் அனைவரும் உள்ளூர் மருத்துவ நிறுவனங்களில் உரிய சிகிச்சை பெற்றுள்ளனர்.
பெய்ஜிங்கில், சுமார் 100 காயமுற்றோர் பெய்ஜிங் முதியோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பெய்ஜிங் மாநகரின் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் சிறந்த இயற்கைச் சூழ்நிலை உள்ளது. அதன் துணைத் தலைவர் yang bing கூறியதாவது
பெய்ஜிங் மாநகரின் பல்வேறு பெரிய மருத்துவமனைகள், காயமுற்ற இந்த 100 போருக்கு சிறப்பாக மருத்துவ நிபுணர் குழு ஒன்றை உருவாக்கின. இக்குழுவில் 94 நிபுணர்கள் இடம்பெறுகின்றனர். மருத்துவ நிபுணர் பிரிவு, அன்றாட மருத்துவ சிகிச்சைப் பிரிவு, பிற்கால குணமடைதலுக்கான சேவைப் பிரிவு ஆகியவை இதில் அடங்கும் என்றார் அவர்.
காயமுற்றவர்களுக்குக் குடும்பம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், சிறப்பு அன்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் ஒரு ஆறுதல் கடிதம், அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் அடங்கிய பை முதலியவை ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளன. 79 வயது மூதாட்டி ஒருவர் கூறியதாவது
நேற்று பெய்ஜிங் வந்தடைந்தேன். மலர்கள் உள்ளிட்ட அதிக அன்பளிப்புப் பொருட்களைப் பெற்றுள்ளேன். எங்களை சிறப்பாகவும் அன்பாகவும் கவனிக்கின்றனர் என்றார் அவர்.
மருத்துவப் பணியாளர்களின் சிகிச்சை பெறும் அதேவேளையில், அவர்கள் உள்ளூர் மக்களின் அன்பையும் கவனத்தையும் உணர்ந்துள்ளனர்.
சான் துங் மாநிலத்தின் சிங் தாவ் நகரத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காயமுற்றோர் சிகிச்சை பெறும் தகவல்களை உள்ளூர் செய்தி ஊடகங்கள் அறிவித்த பின், பல நகரவாசிகளும், தன்னார்வ தொண்டர்களும், இந்நகரில் கல்வி பயிலும் அல்லது பணி புரியும் சி ச்சுவான் மக்களும் பல்வேறு வடிவங்களில் அவர்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காயமுற்றோரை அனுமதித்துள்ள மருத்துவமனைகள், முழு மூச்சுடன் சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தவிர, அவர்களுக்கு உள நில உதவி நடவடிக்கை செயலாக்க முறையில் மேற்கொண்டு வருகின்றன.
இனம், முகவரி, காய நிலைமை உள்ளிட்ட காயமுற்றோரின் விவரமான தகவல்களை அரசின் தொடர்புடைய பணியாளர்கள் தொகுத்துள்ளனர். குணம் அடைந்த பிறகு, அவர்களின் வாழ்க்கைக்கான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து குடியமர்த்தும் பணி, பொது துறை அமைச்சகம், பொதுத் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வருகின்றது.