அண்மையில், வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவி அளித்து குடியமர்த்துவது பற்றிய ஆலோசனை ஆவணத்தை சீன பொதுத் துறை அமைச்சம் வெளியிட்டது.
தற்காலிகமாக தங்களது குடும்பத்தினரை பிரிந்துள்ள குழந்தைகளின் பெற்றோரையும் குடும்பத்தினரையும் விரைவாக தேடும் அதே வேளை, சிச்சுவான் மாநிலத்தில் சிறந்த சமூக நல நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் சேர்க்கப்பட இக்குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இவ்வாவணத்தில் முன்வைக்கப்பட்டது. தவிர, குடும்பத்தினரின் கண்காணிப்பு, இதர குடும்பங்கள் தத்து எடுப்பது, தத்துப்பிள்ளையாக கருதி உதவுவது முதலிய வழிமுறைகள் மூலம், அனாதை குழந்தைகளுக்கு நீண்டகால உதவிகளும் ஏற்பாடு செய்யப்படும். 10 வயதுக்கு மேலான அனாதை குழந்தைகளை தத்தும் எடுக்கும் குடும்பங்கள், இக்குழந்தைகளின் அனுமதி பெற வேண்டும் என்று இந்த ஆவணம் கோரியது.
தவிரவும், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்காந ஏற்பாடுகளை செவ்வனே செய்யும் வகையில், சிச்சுவான் மாநிலத்திலான சமூக நில நிறுவனங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டது.
|