நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள கான் சூ மாநிலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று இம்மாநிலத்தின் நீர் மூலவளப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் ஒன்று கூறுகிறது.
இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடிநீர் பற்றாக்குறை கொண்ட 6இலட்சத்து 47ஆயிரத்து 400 மக்கள் தொகையில், ஏறக்குறைய 6இலட்சத்து பேருக்கான குடிநீர் நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது
வெச்சுவான் நிலநடுக்கத்தால் கான் சூ மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் நீர் விநியோக திட்டப்பணி பாதிக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்கு பின், கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திட்டப்பணியை கான் சூ மாநில அரசு விரைவாக சோதனை செய்தது. கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் உடனடிபயன்பாட்டு குடிநீர் வசதிகளை கட்டியமைத்து, நீரை கொண்டு செல்லும் கருவிகளை வாங்கி, பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீருக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், 2கோடியே 20இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.
|