• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 18:48:21    
நன்கொடை நிதி மற்றும் பொருட்களின் பயனுள்ள பயன்பாட்டுக்கான உத்தரவாதம்

cri

வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடை நிதியும் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே, பயன்படுதப்படுவதை சீனா உத்தரவாதம் செய்யும் என்று சீனப் பொதுத் துறை அமைச்சகத்தின் பேரிடர் நீக்க துறையின் தலைவர் Wang Zhenyao தெரிவித்தார்.

இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், நன்கொடை நிதியும் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனப் பொதுத் துறை அமைச்சகம், மீட்புதவி நிதி மற்றும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு முறையை வெளியிட்டு, கண்டிப்பான ஒழுங்கு முறையை உருவாக்கியுள்ளது என்று Wang Zhenyao கூறினார்.தெளிவான எழுத்து பதிவேடு மூலம், நிதி மற்றும் பொருட்களை பதிவு செய்து வினியோகிக்கும் போக்கின் தெளிவு மற்றும் வெளிப்படைத் தன்மை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.