தற்போது, தான் ச்சியா ஷானில் நிலநடுக்கத்தால் உருவான ஏரியின் நீர், 20 கோடி கன மீட்டருக்கு மேலானது. நீர்க்கசிவு நிகழ்ந்துள்ளது. நில அதிர்வுகள், மேல்பகுதியில் மழை பெய்வது, அணைக்கட்டின் நிலவியல் அமைப்பு முதலிய நிர்ணயிக்கப்படாத காரணங்களால் பாதிக்கப்பட்டு, இத்தகைய ஏரியின் அணைக்கட்டு இடிந்து போகும் சாத்தியக்கூறு, அதிகரித்து வருகிறது என்று தான் ச்சியா ஷானில் நிலநடுக்கத்தால் உருவான ஏரியை மீட்கும் பணித் தலைமையகம் தெரிவித்தது.
மே திங்கள் 31ம் நாள் முதல், தான் ச்சியா ஷானின் கீழ்ப்பகுதியிலுள்ள மியான் யாங் நகரின் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் குடிபெயரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
|