சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவானில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், மொத்தம் 166 நாடுகளும் 16 சர்வதேச அமைப்புகளும், பல்வேறு முறைகளில், சீனாவுக்கு நிதி மற்றும் பொருட்கள் மீட்புதவியை வழங்கியுள்ளன. நேற்று சீன அரசவையின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.
இம்மீட்புதவியில், சுமார் 355 கோடியே 50 இலட்சம் யுவான் நிதி உதவியும், சுமார் 5 ஆயிரம் டன் எடையுள்ள மீட்புதவிப் பொருட்களும் அடங்கும்.
தவிர, ஜப்பான், ரஷியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அவசர மீட்புதவிக் குழுக்கள், நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 9 மருத்துவச் சிகிச்சைக் குழுக்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள காயமுற்றோருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேசச் சமூகத்தின் மீட்புதவிக்கு சீனா நன்றி தெரிவிக்கிறது என்று சீனாவின் தொடர்புடைய வாரியம் கூறியது.
|