• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-05 09:58:23    
ரெய்வே கட்டியைப்பு துறை

cri

கலை..........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேயரம்.

தமிழன்பன்.........உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கலை கடந்த நிகழ்ச்சிகளில் சீனாவின் விமான கட்டுமானம், தொலை தொடர்பு துறை மற்றும் சீனாவின் முக்கிய விழாக்கள் பற்றி பல நேயர்கள் வினாக்களை முன்வைத்தார்கள்.

கலை..........ஆமாம். நாமும் அவர்களின் கேள்விகளுக்கு நிளக்கமாக பதிலளித்தோம்.

தமிழன்பன்.........அது சரி அண்மையில் நேயர்கள் எதாவது வினாக்கள் எழுப்பினார்களா.

கலை.........விபரமாக கூறினால் பல கேள்விகள். எனவே பல விடைகள் அளிக்க வேண்டும். ஆனால் ஒரு நிகழ்ச்சியில் எல்லா வினாக்களுக்கு மொத்தமாக பதிலளிக்க முடியாது. அல்லவா?

தமிழன்பன்.........நீங்கள் சொன்னது சரிதான். நாம் ஒரு கேள்வியை தலைப்பாக எடுத்துக் கொண்டு விளக்கம் கொடுக்கலாம்.

கலை..........இது நல்ல யோசனை. அப்போ நேயர்கள் கேட்ட கேள்விகளை பார்க்கலாமா?

தமிழன்பன்.........சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி கேட்ட வினாக்களில் ஒன்றுக்கு இன்று பதிலளிக்கலாமே.

கலை..........அதில் ஐயமில்லை. கே வேலுச்சாமி சீனாவின் இருப்புப் பாதைக் கட்டுமானத்தின் வளர்ச்சி பற்றி கூற வேண்டுமென ஆர்வம் காட்டினார்.

தமிழன்பன்.........அது பற்றி நாம் விபரமாக விளக்கி கூறலாம்.

கலை..........சீன இருப்புப் பாதை வளர்ச்சி பற்றி குறிப்பிட்டால் முதலில் சீனாவின் இருப்புப் பாதை கட்டியமைப்பதற்கு அடித்தளமிட்டு முக்கிய பங்கு ஆற்றிய முன்னோர் ஒருவரை மறக்க கூடாது.

தமிழன்பன்.........அவர் யார்? சீனாவின் இருப்புப் பாதை கட்டுமானத்தில் அவர் என்ன பங்கு ஆற்றினார்?

கலை..........அவரின் பெயர் ச்சென் தியன் யூ. 1905ம் ஆண்டு அவர் சீனாவின் முதலாவது இருப்புப் பாதை உருவரைவு செய்தவராவார். அந்த இருப்புப் பாதை சீனாவின் பெய்சிங் புறநகரிலுள்ள பாட்டாலின் பெருஞ் சுவரின் மலையடிவாரத்தில் கட்டியமைக்கப்பட்டது.

தமிழன்பன்.........இது சீனாவின் இருப்புப் பாதையின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் சாட்சியாக கருதப்படுகின்றது.

கலை..........ஆமாம். இதுவரை இந்த இருப்புப் பாதை தொடர்ந்து போக்குவரத்து கடமைகளை நிறைவேற்றியுள்ளது. அது பெய்ஜிங்கிலிருந்து ஹோ பேய் மாநிலத்தின் சான் சியா கௌ நகருக்குச் செல்லும் இருப்புப் பாதையாகும்.

தமிழன்பன்......... முனைவர் ச்சென் தியன் யூயை நினைவு கூரும் வகையில் சிங் லுன் சியௌ என்னும் தொடர் வண்டி நிலையம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டியமைக்கப்பட்ட அதே நிலைமையில் தான் இன்றும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கலை.......... முனைவர் ச்சென் தியன் யூ.வின் வெண்கல சிலை தொடர் வண்டி நிலையத்தின் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்.........100 ஆண்டுகளுக்கு முன் உருவரைந்து கட்டியமைக்கப்பட்ட அந்த இருப்புப் பாதை இப்போது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுவதே மதிப்புக்குரிய விடயமாகும்.

கலை..........ஆமாம். இப்போது அதிவுயர் வேக தொடர் வண்டிகள் பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்கின்றன. இந்த இருப்புப் பாதை இத்தகைய முன்னேறிய தொடர் வண்டிகளுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை. இருந்தாலும் பெய்ஜிங்கிலிருந்து உள் மங்கோலியாவின் தலைநகர் ஹுர்ஹோட், முக்கிய மாநகர் பௌ தௌ முதலிய இடங்களுக்கும் ரஷியாவின் தலைநகர் மாள்கோவுக்கும் செல்லும் தொடர் வண்டிகள் தொழில் நுட்ப தேவைக்காக இந்த சிங் லுன் சியௌ தொடர் வண்டி நிலையத்தில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

தமிழன்பன்.........இது மிகவும் பெருமையான விடயமாகும்.

கலை..........இப்போது சீனாவின் இருப்புப் பாதை கட்டுமானம் சீன சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தீவிரமாகியுள்ளது.

தமிழன்பன்.........விரைவாக சென்றால் விபத்து ஏற்படுமா? அண்மையில் சான் துங் மாநிலத்தில் ஏற்பட்ட இருப்புப் பாதை விபத்து வேகம் விரைவுபடுத்துவதன் காரணமே.

கலை..........அப்படியே சிந்திக்க வேண்டும். அண்மையில் ஏற்பட்ட இருப்புப் பாதை விபத்து ஒழுங்கான விதிகளை அத்துமீறியதன் விளைவாகும்.

தமிழன்பன்.........2007ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் வரை சீனாவில் இருப்புப் பாதை நெறிகள் முழுவதிலும் தொடர் வண்டிகள் செல்லும் வேகம் 6 முறை அதிகரித்துள்ளது.

கலை..........ஆமாம். பெய்ஜிங்யிலிருந்து வட சீனாவின் ஹெலுங்ஜியான் மாநிலத்தின் தலைநகரான ஹார்பின் நகர் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய், பெய்ஜிங்கிலிருந்து குவாங்சோ நகருக்குச் செல்லும் இருப்புப் பாதைகள் உள்ளிட்ட 6 முக்கிய இருப்புப் பாதைகளில் தொடர் வண்டிகள் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகின்றன.

தமிழன்பன்.........2007ம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் 480 தொடர் வண்டிகளின் ஓடும் வேகம் மணிக்கு 200 கிலோமீட்டரை தாண்டியதாக அறிந்தேன். அது உண்மைதானா?

கலை.........அது உண்மைதான். இந்த தொடர் வண்டிகள் 17 மாநிலங்களுக்குச் செல்கின்றன. அதன் விளைவாக சீனாவில் தொடர் வண்டிகள் மூலம் பயணம் செய்யும் பயணியர் விகிதம் 18 விழுக்காடும் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படும் விகிதம் 12 விழுக்காடாக அதிகரிக்கும்.

தமிழன்பன்.........இது மகிழ்ச்சிகரமான செய்திதான்.

கலை..........ஆமாம்.

தமிழன்பன்......... 2008ம் ஆண்டு அதாவது இவ்வாண்டில் சீனாவின் இருப்புப் பாதை கட்டுமானத்தின் நிலைமை எப்படி?

கலை..........இவ்வாண்டு சீனாவின் இருப்புப் பாதை மேலும் விரைவாக வளரும் ஆண்டாகும்.

தமிழன்பன்.........திட்டவட்டமான வளர்ச்சி திட்டம் எதாவது உண்டா?

கலை..........உண்டு. இவ்வாண்டு பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்குச் செல்லும் வேகமான இருப்புப் பாதை உள்ளிட்ட 10 நெறிகள் செப்பனிடப்படுகின்றன. அதன் நீளம் 4100 கிலோமீட்டராகும்.

தமிழன்பன்.........இவ்வளவு விரைவாக வளர்ச்சியடைந்த இருப்புப் பாதை வெளியூர்களில் சுற்றுப் பயணம் செய்யும் பயணியரையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் தேவையை நிறைவேற்றலாம் அல்லவா?

கலை.........இப்போது இப்படி செல்ல முடியாது. சீனாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியுடன் இணைப்பதில் இன்னும் அதிக இடைவெளி நிலவுகின்றது.

திமிழன்பன்.........அப்படியிருந்தால் அதனை சீர்செய்ய என்ன செய்ய வேண்டும்? கலை.........கடந்த சில ஆண்டுகால முயற்சிகள் அடிப்படையில் சீன இருப்புப் பாதை அமைச்சகம் 11வது 5 ஆண்டு திட்டத்தில் பயணியரை மட்டும் ஏற்றிச் செல்ல 7000 கிலோமீட்டர் நீளமான இருப்புப் பாதையும் சரக்குகளை ஏற்றிச் செல்ல பத்தாயிரம் கிலோமீட்டர் நீளமான இருப்புப் பாதையும் போடப்படும்.

திமிழன்பன்........மூன்று, ஐந்து ஆண்டுகால முயற்சிகள் மூலம் பயணியரையும் சரக்குகளையும் பிரித்து தனித்தனியாக ஏற்றிச் செல்லும் அலுவல் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லையே.

கலை.........கண்டிப்பாக. அப்போது நீண்டகாலமாக எதிர்பார்க்கின்ற பயணிகளையும் சரக்குகளையும் தனியாக ஏற்றிச் செல்லும் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

திமிழன்பன்........இருப்புப் பாதையின் நிடைக்கால மற்றும் நீண்டகால திட்டத்தின் படி, 2010ம் ஆண்டில் சீனாவின் இருப்புப் பாதையின் நீளம் எவ்வளவா இருக்கும்?

கலை.........அப்போது 90 ஆயிரம் கிலோமீட்டரை தாண்டும்.

திமிழன்பன்........2020ம் ஆண்டில் இந்த இருப்புப் பாதையின் நீளம் எவ்வளவு?

கலை.........அப்போது இருப்புப் பாதையின் நீளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும்.

திமிழன்பன்........2010ம் ஆண்டில் பயணியார் தொடர் வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?

கலை.........அப்போது 21 இருப்புப் பாதை நெறிகள் பயணியர்க்காக இயங்கும். அதிவுயர் வேகமுடைய தொடர் வண்டிகள் 25 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான பாதையில் சென்று வரும்.

திமிழன்பன்........அப்படியிருந்தால் இந்த வேகமான இருப்புப் பாதையில் சென்று வரும் தொடர் வண்டிகளின் எண்ணிக்கை எத்தனை?

கலை.........அதன் எண்ணிக்கை 1000ை தாண்டும்.

திமிழன்பன்.......இவ்வாண்டு ஏப்ரல் 18ம் நாள் உலகின் கவனத்தையே ஈர்த்த பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்குச் செல்லும் அதிவுயர் வேகமான இருப்புப் பாதையின் கட்டுமான துவக்க விழா நடைபெற்றதுது.

கலை.........துவக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் நிரந்தர குழுவின் உறுப்பினரும் தலைமை அமைச்சருமான வென்சியாபோ இவ்விருப்பு பாதை கட்டியமைக்கும் குழுமத்துக்கு துவக்கி வைத்தார். அதன் மூலம் இவ்விருப்பு பாதையின் கட்டுமானத்தின் தொடக்கத்தை அறிவித்தார்.

திமிழன்பன்........இந்த இருப்புப் பாதை எந்த மாதிரியாக இருக்கின்றது?

கலை.........இரட்டை இருப்புப் பாதை மாதிரியாக இது திகழும்.

திமிழன்பன்........அதன் நீளம் எவ்வளவு? எங்கிலிருந்து எங்கே வரை செல்லும்?

கலை........1318 கிலோமீட்டர் நீளமான இந்த இருப்புப் பாதை பெய்ஜிங் தெற்கு இருப்புப் பாதை நிலையத்திலிருந்து ஷாங்காயின் ஹுன்சியோ நிலையம் வரை செல்லும்.

திமிழன்பன்........மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துடன் அது செல்ல முடியும்?

கலை......... இத்தகைய இருப்புப் பாதையில் ஓடும் தொடர் வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் வேகமுடையது.

திமிழன்பன்........இந்த இருப்புப் பாதை கட்டுமானம் முடிந்து போக்குவரத்து துவங்கியவுடனே இவ்வளவு வேகத்தோடு தொடர் வண்டி ஓட முடியுமா?

கலை.........அப்படிஅல்ல. தொடக்கத்தில் சோதனை முறையில் தொடர் வண்டி மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்துடன் தான் செல்லும்.

திமிழன்பன்........அப்படியிருந்தால் ஆண்டுக்கு எத்தனை பயணிகள் அதில் பயணம் செய்வர்?

கலை.........மதிப்பீட்டின் படி இந்த இருப்புப் பாதையின் திறன் மூலம் ஆண்டுக்கு 8 கோடி பயணிகள் பயணம் செய்ய முடியும்.

திமிழன்பன்........ித்திட்டத்திற்கான ஒதுக்கீடு எவ்வளவு?

கலை.........மொத்தம் 22 ஆயிரத்து 94 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

திமிழன்பன்........திட்டத்தின் கட்டுமான காலம்?

கலை.........5 ஆண்டுகளாக இருக்கும்.

திமிழன்பன்......1318 கிலோமீட்டர் நீளமான இருப்புப் பாதை எத்தனை மாநிலங்களுக்கு ஊடாக செல்ல முடியும்?

கலை.............மொத்தம் மூன்று மாநகரங்கள் 4 மாநிலங்கள் வழியாக இந்த இருப்புப் பாதை செல்கின்றது.

தமிழன்பன்...........இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தொகை எவ்வளவு?

கலை.............நீங்கள் கேட்டது சரியான வினா. இந்த இருப்புப் பாதை செல்லும் இப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தொகை சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 25 விழுகாடு வகிக்கிறது. இப்பிரதேசங்களின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு நாட்டின் உற்பத்தி மதிப்பில் 40 விழுக்காடு வகிக்கிறது.

தமிழன்பன்...........ஆகவே இந்த இருப்புப் பாதையை கட்டியமைப்பது சீனாவின் இருப்புப் பாதை வளர்ச்சியின் இலட்சியத்தில் முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும்.

கலை.............ஆமாம். இப்பிரதேசங்கள் சீனப் பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த உள்ளார்ந்த ஆற்றல் கொண்டுள்ள பிரதேசங்களாகும்.

தமிழன்பன்...........ஆகவே இப்பிரதேசத்தில் மிக வேகமான நவீன இருப்புப் பாதை கட்டியமைப்பது சாலசிறந்ததே.

கலை.............நேயர்களே இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டது.

தமிழன்பன்...........அடுத்த முறை சீனாவில் நெகிழி பை எப்படி கையாள்வது பற்றி அறிமுகபடுத்துவோம்.

கலை.............நிகழ்ச்சியை கேட்க தவறாதீர்கள். நிகழ்ச்சியை கேட்டு உங்கள் கருத்துக்களை தொலை பேசி மூலமோ அல்லது கடிதம் மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள். நேயர் நேரம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்.

தமிழன்பன்...........அடுத்த வாரம் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.