• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-05 10:00:45    
வெளிநாடுகளில் வேரூன்றும் சீன மருத்துவம்

cri
வெளிநாடுகளில் வேரூன்றும் சீன மருத்துவம்

சீனா, பாரம்பரியம் மிகுந்த, நீண்ட வரலாறு கொண்ட நாடாகும். உலக அளவில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் சீனா, உலகிற்கு பெரும் பங்களிக்கும் வலிமையோடு வளர்ந்து வருகிறது. பல துறைகளிலான நுட்பங்களில் சீனாவை பின்பற்றி பல நாடுகள் பயன் பெறுகின்றன. அவ்வாறு மேலைநாட்டவர்கள் பயன்பெறும் முறைகளில் சீன மருத்துவத் துறையும் அடங்கும். பல்வேறு வகையான நோய்களுக்கு மூலிகைகளாலான சீன பாரம்பரிய மருந்துகள் இன்றும் பலநாட்டு மக்களால் போற்றப்படுகின்றன. ஜெர்மனியில் சீன பாரம்பரிய மருத்துவம் ஆழமாக வேரூன்றியுள்ளது. 1980 ஆம் ஆண்டு Anton Staudinfer என்பவரின் தந்தை நோய்வாய்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது சீன பாரம்பரிய மருத்துவம் செய்யப்பட்டு உயிர் பிழைத்துக்கொண்டார். அதன் மூலம் சீன மருத்துவத்தின் மேன்மையை அறிந்து கொண்ட Anton Staudinfer ஜெர்மனி மக்களனைவரும் அதனுடைய பயனை பெற வேண்டுமென்று விரும்பி, 17 ஆண்டுகளுக்கு முன்னர் 7, 500 மக்கள் கொண்ட சிறுநகரத்தில், சீன மருத்துவ சிகிச்சைக்கான சிறு மருத்துவமனையை நிறுவினார். தற்போது அது 21 மருத்துவர்கள் குழுவை கொண்டு, ஐரேப்பிய நாடுகளிலிருந்து வரும் எல்லா நோயாளிகளையும் உபசரிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மேற்கத்திய மருந்துகள் பயனில்லாமல் போகிறபோது இங்கு வருகின்ற நோயாளிகள் சீன மருத்துவத்தால் முழுமையான உடல் நலம் பெற்று ஆச்சரியமடைகிறார்கள்.

Anton Staudinfer ரின் சீன பாரம்பரிய மருத்துவத்தின் புகழை பரப்புகின்ற முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக சீன தேசிய பாரம்பரிய மருத்துவ நிர்வாகமும், பெய்சிங்கை மையமாக கொண்ட உலக சீன மருத்துவ அமைப்புகளின் கூட்டமைப்பும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து Anton Staudinfer யை கௌவரப்படுத்தியுள்ளது. அதேபோல சீன பாரம்பரிய மருத்துவத்தை பரப்புகின்ற ஆஸதிரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் கல்லூரியை நடத்துகின்ற Ken Greenwood, அமெரிக்காவின் மருத்துவர் Daniel Bensky ஆகியோரும் கௌரவப்படுத்தப்பட்டனர். Anton Staudinfer யின் மருத்துவமனை மட்டும் தான் சீன மருத்துவர்களை கொண்டு செயல்படும் சிறப்பு அனுமதியை ஜெர்மனி அரசிடமிருந்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

எலும்புக்கூட்டை கடவுளாக

கடமையை கடவுளாக கருதும் கடமைதவறா கண்ணிய மக்கள் குறைந்து வரும் காலக்கட்டத்திலும் கடமையை நேர்மையாக நீதியாக செய்யும் பலர் இருக்க தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் wang Xuemei அம்மையார். அலுவலகத்தில் மேசைக்கு பக்கத்தில் தொங்கிக் கெண்டிருக்கும் மனித எலும்புக்கூட்டை இது தான் எனது கடவுள் என்கிறார் அவர். Wang தேசிய அளவில் புலன்விசாரணையில் முதலில் முதுகலைப் பட்டபடிப்பு பெற்றவர்களில் ஒருவர். இவர் மரணதண்டனை நிறைவேற்றும் அதிவுயர் அலுவலகத்தில் பிரேத பரிசோதனை செய்யும் உயர்நிலையான நபர்களில் ஒருவர். அவர் இதுவரை 600 பிரேதபரிசோதனைகளை செய்துள்ளதோடு அவர்களின் இறப்புக்கான காரணங்களை பொது மக்களுக்கு தெளிவாக விளக்கியுள்ளார். இப்பணிபொறுப்பேற்ற தொடக்கத்தில் Wang சிறையில் இறந்துபோன கைதி ஒருவரின் உடலை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர் நோயால் இறந்தார் என்ற காவல்துறை அதிகாரியின் கூற்றை மறுத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதற்காக துன்புறுத்தப்பட்டதால் இறந்துள்ளார் என்று நிரூபித்தார். எனவே அதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இறப்புக்கான காரணங்களை விளக்குவது என்னுடைய வேலை. இறந்தோருக்கு நான் பொறுப்பாக இருக்க வேண்டும். எலும்புக்கூடு தான் எனது கடவுள் என்கிறார் கடமை தவறாத wang. பிணங்களை வெட்டி இறந்ததற்கான காரணங்களை ஆராயும் அவர், வீட்டில் பன்றி இறைச்சியை கூட வெட்ட பயப்படுவாராம்.