அதிகமான பாரம்பரிய கலைவடிவங்களோடு அமைந்த காட்சித்தலங்களையும் அழகான இயற்கைக் காட்சிகளையும் கொண்ட ஹுவாகோ சான் என்னும் மலை, ஆண்டுதோறும், பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மலையில் நுழைந்தவுடன், ஒவ்வொரு இடத்திலும்
 காட்சி தலங்களைக் காணலாம். ஒவ்வொரு காட்சிக்கும், செவிவழி கதையும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், எண்ணற்ற பயணிகள், அதிக விருப்பத்துடன், இங்கு பயணம் செய்து வருகின்றனர். இங்குள்ள புராணக் கதையோடு தொடர்புடைய காட்சிகளைப் பார்த்து, பயணிகள் அனைவரும் ஆச்சரியமடைகின்றனர். மலேசிய பயணி ஹபிபா அம்மையார், முதல் முறையாக இங்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றார். ஹுவாகோ சான் மலையின் அழகு, அவருடைய மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
 இங்கு இயற்கை காட்சிகள், மிகவும் அழகானவை. காலநிலை சீராக இருக்கிறது. மக்களை ஈர்க்கும் பாரம்பரிய கலைவடிவங்களோடு அமைந்த காட்சித் தலங்கள் மிகவும் அதிகம். இங்கு வந்தால், மனநிலை நன்றாக மாறும் என்றார் அவர். அம்மலையில், தாவர வகைகள் மிகவும் அதிகம். ஒர் ஆண்டின் நான்கு காலங்களிலும், பல்வகை பழங்கள் உள்ளன. சீன நெல்லிக்காய், சப்போட்டா, சிங்கோ, கஷ்கொட்டை ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை. தவிர, மேகம் மற்றும் மூடு பனி தேயிலை, குறிப்பிடத்தக்கது. ஹுவாகோ சான்னில், ஊற்று நீரைப் பயன்படுத்தி ஊறவைத்த தேனீரைக் குடித்து சுவையாகவும், உடலுக்கு நன்றாகவும் இருக்கிறது.
 லியான் யுன் காங்கின் சுற்றுலா துறையின் தலைவர் லீ தேள யீங் அறிமுகப்படுத்துகையில், இந்த வகை தேயிலை, மேகம் மற்றும் மூடு பனியில் வளர்கிறது. இந்தச் சூழல் இல்லைவிட்டால், அதன் தரம், சரியாக இருக்காது. மேகம் மற்றும் மூடு பனி தேயிலை, உடலுக்கு நலன் மிக்கது என்று கூறினார். நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில், அழகான அற்புதமான ஹுவாகோ சான் என்னும் மலை பற்றி கேட்டீர்கள். இதைக் கேட்டப்பின் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமன்ற உணர்வு, உங்களுக்குள் ஏற்பட்டிருக்குமே.
 இனி, சுற்றுலா தகவல்கள் ஹுவாகோ சான் என்னும் மலை, லியான் யுன் காங் நகரப்பகுதியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது. வசதியான போக்குவரத்தும் இருக்கிறது. பயணிகள், சுற்றுலாப் பேருந்து மூலம் செல்லலாம். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள், குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கி மகிழலாம். தற்போது, மலையிலுள்ள சாலை மூலம், முக்கிய மலை சிகரத்தை அடையலாம்.
|