• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-05 16:18:31    
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்புப் பணி

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி இன்று பெய்சிங்கில் நடத்திய கூட்டத்தில், சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த வெச்சுவான் நிலநடுக்கத்துக்கு பின், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான புனரமைப்புப் பணியின் பரவல் பற்றி ஆராயப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

புனரமைப்பை விரைவுப்படுத்துவதற்காக, நாடுமுழுவதிலுமான ஆற்றல் மூலம், கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வட்டத்துக்கு ஒரு மாநிலம் உதவி செய்வது என்ற கொள்கைக்கு இணங்க, மூல வளத்தை நியாயமாக பயன்படுத்தி, பரஸ்பர உதவி அமைப்பு முறையை உருவாக்கி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான புனரமைப்பை விரைவுப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிகாட்டப்பட்டது.

பரஸ்பர உதவி அமைப்பு முறை நிறுவப்பட்ட பின், உதவி கடமைக்கு பொறுப்பான தொடர்புடைய மாநிலங்களும் மாநகரங்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, பொருள், நிதி , மனித வளங்கள் முதலிய பல்வகை ஆதரவுகளை ஆக்கப்பூர்வமாக வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நகர-கிராமப்புற அடிப்படை வசதிகள், பொதுச் சேவை வசதிகள் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்கான புனரமைப்புப் பணிகளுக்கு உதவியளித்து, திறமைசாலிகள் பயற்சி, தொழில் நுட்பச் சேவை முதலியவற்றை வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கோரியது.