வென் ச்சுவன் நிலநடுக்கத்துக்கான சுற்றுலா துறையின் புனரமைப்பு திட்டத்துக்கு வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம் நேற்று சந்து நகரில் நடைபெற்றது. வரைவுத் திட்ட படி, 2008ம் முதல், 2010ம் ஆண்டுக்குள், சி ச்சுவன் நிலநடுக்கத்துக்கான சுற்றுலாத் துறை புனரமைப்பு திட்டத்தை சீனா நிறைவேற்றி முடிக்கும்.
வென் ச்சுவன் உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், இத்திட்டத்தின் முக்கிய பிரதேசங்களாகும். சேன் சீ, கன் சூ ஆகிய மாநிலங்கள், சி ச்சுவன் வென் ச்சுவனின் திட்டத்தின் படி, தனது புனரமைப்பு திட்டங்களை வகுக்கலாம் என்று தேசிய சுற்றுலா துறையின் தலைவர் சௌ ஜீ வெய், தெரிவித்தார். நேரடியாக பாதிக்கப்பட்டாத சி ச்சுவன் தென் பகுதியிலுள்ள சூ ஹேய், சிறியளவில் பாதிக்கப்பட்ட ஜியு சை கோ ஆகிய சுற்றுலா இடங்கள், வெகுவிரைவில் சுற்றுலா துறையை மீட்க வேண்டும். பொது திட்டத்திற்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
|