கடந்த சில நாட்களில், சி ச்சுவனில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் நகரங்களிலும், புனரமைப்பு, உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொண்ட காட்சிகளை செய்தியாளர்கள் நேரில் கண்டனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தொழிற்துறை நிறுவனங்களின் உற்பத்தியை மீட்கும் செயல் திட்டம், வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு திங்களில், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் நிலைமைகள் அறிய வேண்டும். 3 திங்களில், உற்பத்தி செய்வதை மீட்கக் கூடிய, நிலைமை வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு உதவி அளிக்க வேண்டும். ஓர் ஆண்டில், உற்பத்தி செய்வதை மீட்க உள்ள தொழில் நிறுவனங்கள், புனரமைப்பு ஆக்கப்பணியை உடனே துவங்க வேண்டும்.
அதே வேளையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மும்முரமாக பயிரிட்டு, அறுவடை செய்து வேளாண் பணிகளை தொடருகின்றனர்.
|