• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 15:26:00    
போதலா மாளிகை பராமரிப்பு

cri
போதலா மாளிகை, சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது 1300க்கு மேற்பட்ட ஆண்டுகால வரலாறுடையதோடு, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள பண்டைகால கட்டிடமாகும்.

நீண்டகாலம் கட்டிட அமைப்பு, இயற்கை சூழல் மாற்றம் ஆகிய காரணத்தால், இந்த மாளிகையின் அடிதளம் நாசமாகத் துவங்கியுள்ளது. கடந்த நூற்றாண்டின் 50 ம் ஆண்டுகளின் துவக்கம் முதல், குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில், சீன அரசு, இந்த மாளிகையை பெருமளவில் செப்பனிட்டு வந்துள்ளது.

1959ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், சீன அரசு, அந்த மாளிகைக்கு பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. அதைத் தவிர, 1989 மற்றும் 2002ம் ஆண்டுகளில் சீன அரசு, இரண்டு பெரிய அளவிலான பராமரிப்புக்கு பெரும் நிதியை மேலும் ஒதுக்கிவைத்தது. போதலா மாளிகையின் நிர்வாகத் துறையின் தலைவர் qiang ba ge sang கூறியதாவது

1989 முதல் 1994ம் ஆண்டு வரை, போதலா மாளிகைக்கான முதல் முறையாக செப்பனிட்டப்பட்ட போது, நடுவண் அரசு, 5 கோடியே 30 இலட்சம் யுவானை ஒதுக்கிவைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறை பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. 2002ம் ஆண்டு, நடுவண் அரசு, 17 கோடி யுவானை ஒதுக்கிவைத்தது என்றார் அவர்.

இரண்டாவது முறை பராமரிப்பை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதல மாளிகைக்கு ஐந்து துறைகளிலான சீரமைப்பு திட்டப்பணிகள் உண்டு. பண்டைகால கட்டிடத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவது, சுற்றுப்புறச்சூழலைக் கட்டுப்படுத்தி, சீராக்குவது, மின்சார விநியோகம், நீர் இறைப்பு முறைமை, தீ அணைப்பு, இடர்காப்பு பாதுகாப்பு, இடியைத் தவிர்க்கும் முறைமை ஆகியவற்றைச் சீராக்கி உயர்த்துவது, கட்டிடத்தின் உயர் அறிவியல் தொழில் நுட்பத்தின் நீண்டகாலப் பயனுள்ள கண்காணிப்பு, சுவர் ஓவியங்களைப் பராமரிப்பது ஆகியவை, இந்த சீரமைப்பு திட்டங்களாகும். Jiang yang என்ற முதியவர், திபெத் லாசாவில் பண்டைய கலை கட்டிடத்தின் நுண்கலை கூட்டு நிறுவனத்தின் முதுபெரும் தொழில் நுட்பப் பணியாளர் ஆவார். கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில் அவர், போதலா மாளிகையைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடலானார். அவர் கூறியதாவது

போதலா மாளிகை முதலிய திபெத்தின் முக்கிய தொல் பொருட்களைச் செப்பனிடும் திட்டப்பணிகளில் நான் பல முறை ஈடுபட்டுள்ளேன். இத்தொல் பொருட்கள், சீனத்தேசிய மற்றும் உலகளவில் உயர் நிலையான மிக முக்கிய தொல் பொருட்களாகும். அவற்றைப் பாதுகாத்து செப்பனிடும் வகையில், சீன அரசு, பெரும் நிதியை ஒதுக்கிவைத்துள்ளது. தொழில் நுட்பத்திலும் பிற சீரமைப்பு பொருட்களிலும் வரலாற்றுத் தொல் பொருளான போதலா மாளிகை செப்பனிடும் திட்டப்பணி, பிற கட்டிடத்திட்டப் பணிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஏனென்றால், வரலாற்றுக்கு மதிப்பு அளிப்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றோம். ஒவ்வொரு திட்டப்பணியை மேற்கொள்ளும் போதும், பல்வேறு துறைகளின் கருத்துக்களை கேட்டறிகிறோம். அவ்வாறு, பராமரித்த போதலா மாளிகை, முன்பை போல, உறுதியாக இருக்கின்றது என்றார் அவர்.

Suo lang என்பவர், மத நம்பிக்கை கொண்டவராவார். போதலா மாளிகையின் இரண்டு பராமரிப்புகளை நேரிடையாகப் பார்த்த அவர் கூறியதாவது

கடந்த சில ஆண்டுகளாக, போதலா மாளிகை, sa jia கோயில் முதலிய முக்கிய கோயில்களுக்கான பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் சீன அரசு, பெரும் பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. அது, திபெத்தின் தலைசிறந்த தொல்பொருட்களை நன்றாக பாதுகாத்துள்ளது மட்டுமல்ல, என்னைப் பொறுத்தவரை, முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியுமாகும் என்றார் அவர். போதலா மாளிகையின் மேலாண்மை துறை தலைவர் qamba kelzang கூறியதாவது

இப்போது, போதலா மாளிகையின் பராமரிப்பு பணியில் 70 விழுக்காட்டை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதே வேகத்தில் நிறைவேற்றப்பட்டால், அதன் பராமரிப்புப் பணி, இவ்வாண்டுக்குள் முழுமையாக நிறைவேற கூடும் என்றார் அவர்.

சீன அரசு திட்டத்துக்கு இணங்க, இவ்வாண்டு முதல், ஏறக்குறைய 60 கோடி யுவான் ஒதுக்கிவைக்கும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள 22 புராதன கட்டிடங்கள் மற்றும் கோயில்களின் முழுமையான பராமரிப்புக்கு இது பயன்படும். சில திட்டப்பணிகள், இவ்வாண்டில் துவங்கும்.