• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 18:33:54    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தில் புனரமைப்புத் திட்டம்

cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தின் புனரமைப்புத் திட்டத்தை வகுக்கச் சீனா துவங்கியுள்ளது என்று சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் பெய்ஜிங்கில் தெரிவித்தனர். 3 ஆண்டுகளுக்குள், பாதிக்கப்பட்டப் பிரதேசங்களிலான அடிப்படை வசதி, மக்களின் வசிப்பிடம் முதலியவை நிலநடுக்கத்துக்கு முந்தைய நிலைமையை எட்ட சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கு பிந்திய 5 ஆண்டுகளுக்குள் இப்பிரதேசங்களின் சமூகம், பொருளாதாரம் ஆகியவை பன்முகங்களிலும் வளர்க்கப்படும் என்று தெரிய வருகின்றது.
சீன அரசவையின் செய்தி அலுவலகம் நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில், சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சின் அதிகாரிகள் நிலநடுக்கத்துக்குப் பிந்திய புனரமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். நகரங்களின் பரப்பு, கிராமப்புறக் கட்டுமானம், நகரம் மற்றும் கிராமப்புற வீடுகளின் கட்டுமானம் முதலியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று இவ்வமைச்சின் துணை அமைச்சர் qi ji தெரிவித்தார். தற்போது, திட்டத்தை வகுக்கும் பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
நகரங்களின் பரப்பு பற்றிய திட்டத்தின் முக்கிய இலக்கை அவர் எடுத்து கூறினார். அவர் கூறியதாவது
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களின் பரப்பு, அளவு ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக வகுப்பது, கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் குடியமர்த்த வேண்டிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்களின் புதிய முகவரி, கட்டுமான அளவு ஆகியவை பற்றிய திட்டத்தை வகுப்பது, மேற்கூறிய கட்டுமானத்தின் அண்மை கால இலக்கையும் முக்கிய நோக்கத்தையும் முன்வைப்பது, வட்டார போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளின் பரப்பு பற்றிய திட்டத்தை வகுப்பது, தேசிய நிலையான வரலாற்று மற்றும் பண்பாட்டு நகரங்களின் பாதிக்கப்பட்ட நிலைமையை மதிப்பீடு செய்வது முதலியவை திட்டத்தின் முக்கிய கடமைகளில் அடங்கும் என்றார் அவர்.
தவிர, நிலநடுத்தக்கால், மிகப்பல வீடுகள் இடிந்துவிழுந்துவிட்டன. பாதிக்கப்பட்ட நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீட்டுவசதிகளின் புனரமைப்புப்பணியும் திட்டத்தில் முக்கியமாக சேர்க்கப்பட்டது.
இத்திட்டத்தைச் சிறப்பாக வகுக்கும் வகையில், கட்டுமான வாரியங்கள் 3 துறைகளில் பணியை மேற்கொள்கின்றன. Qi ji கூறியதாவது
முதலில், பாதிக்கப்பட்ட நகரங்களிலும் மாவட்டங்களிலும் வசிப்பிடங்களின் நிலைமையை பன்முகங்களிலும் மதிப்பிட வேண்டும். அதாவது, கூடிய விரைவில், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, நிலப்பரப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, புனரமைப்பு பணியின் அளவு, வரையறை முதலியவற்றை முன்வைக்க வேண்டும். அதாவது, தொழில் நுட்பக் கோரிக்கை, புனரமைப்பு நிலப்பரப்பு, அதற்கேற்ற வசதிகளின் வரையறை முதலிய கட்டுமான குறியீடுகளை உறுதிப்படுத்தி, வரைவுச் செலவைக் கணக்கிட வேண்டும். மூன்றாவது, புனரமைப்புக்கொள்கைகளை வகுப்பதற்கு ஆலோசனைகள் முன்வைக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய புனரமைப்புத் திட்டம் முழு உலகத்துக்கும் வெளிப்படுத்தப்படும். அதற்குப் பிறகு தான், அனுமதி பெறுவதற்காக அவை தொடர்புடைய வாரியங்களிடம் வழங்கப்படும்.
நடுவண் அரசின் கோரிக்கைக்கிணங்க, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களின் புனரமைப்புப் பணி 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சின் திட்டம் பிரிவின் தலைவர் tang kai கூறினார். அவர் மேலும் கூறியதாவது
அரசின் கோரிக்கையின் படி, திட்டத்தில் முதல் 3 ஆண்டு காலப் பணியையும், இதற்கு பிந்திய 5 ஆண்டு காலப் பணியையும் வகுக்க வேண்டும். முதல் 3 ஆண்டுகளில், அடிப்படை வசதி, பொது சேவை வசதி, மக்களின் வசிப்பிடம் முதலியவற்றை சீற்றத்துக்கு முந்தைய நிலைமைக்கு மீட்க வேண்டும். அதற்கு பிந்திய 5 ஆண்டுகளில், பன்முக வளர்ச்சி காலமாகும் என்றார் அவர்.
புனரமைப்புப் பணிப் போக்கில், நடைமுறை நிலைமைக்கிணங்க இத்திட்டம் சரிப்படுத்தி மேம்படுத்தப்படும் என்று tang kai எடுத்து கூறினார்.
புனரமைப்புப் பணி மிக கடுமையானதாக இருந்தபோதிலும், நாடு முழுவதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சீனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புனரமைப்பு இலக்கு திட்டப்படி நிறைவேறுவது உறுதி என்று இவ்வதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.