நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள், ஜூலை திங்களில், ரஷியாவின் கிமிரோவோ மாநிலத்தில் உளவியல் சிகிச்சை பெறுவர் என்று அம்மாநில அரசின் செய்தி பிரிவு இன்று அறிவித்தது.
அம்மாநில தலைவரின் அழைப்பை ஏற்று, 100 மாணவர்கள் ஜூலை 17ம் நாள் அங்குச் சென்றடைந்து, 3 வாரம் உளவியல் சிகிச்சை பெறுவர்.
இவ்வாறு சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மாணவர்களை ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்கும் தகவலை, இதற்கு முன், ரஷியாவின் சிவெர்டுலோவ்ஸ்க் சில்யாபின்ஸ்க் ஆகிய மாநிலங்களின் அரசுகள் அறிவித்தன.
|