• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-09 19:23:30    
பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் சுகாதார மற்றும் நோய் தடுப்புப் பணி

cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவை தலைமை அமைச்சரும், அரசவையின் பேரிடர் நீக்கப் பணி தலைமையகத்தின் ஆணையாளருமான வென் சியா பாவ், இன்று கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நோய் தடுப்புப் பணி பற்றியும், கான் சு, ஷான் சி ஆகிய மாநிலங்களில் பேரிடர் நீக்கப் பணி பற்றியும் ஆராய்ந்து ஏற்பாடு செய்தார்.
தற்போது, நோய் தடுப்புப் பணி வலுவாகவும், ஒழுங்காகவும் பயன் தரும் முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொது சுகாதார சம்பவங்கள் நிகழ்ந்தது பற்றிய தகவல் ஏதும் இல்லை. கடுமையாக காயமுற்ற மக்களுக்கு முக்கியமாக சிகிச்சை அளித்து, நோய் தடுப்புப் பணியைச் செவ்வனே செய்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பான சுகாதார சேவை ஒழுங்கைக் கூடிய விரைவில் மீட்டு, மக்களின் அடிப்படை மருத்துவக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டம் சுட்டிக்காட்டியது.
தற்போது, கான் சு, ஷான் சி ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், சமூக ஒழுங்கு நிதானமாக உள்ளது. பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி முக்கிய குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளது என்று தெரிய வருகின்றது.