• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-10 14:55:27    
ஜியே தை கோயில்

cri

ஜியே தை கோயில், பெய்ஜிங்கின் யோங் திங் வட்டத்திலுள்ள மா ஆன் மலையில் உள்ளது. அதன் மேற்குப் பகுதியில், ஜி லே ஃபேங்கும், தெற்குப் பகுதியில் லியூ குவொ லிங்கும், வடப் பகுதியில் ஷி லோங் மலையும் உள்ளன. கிழக்குப் பகுதி அதன் சமவெளியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அது, கிழக்கு நோக்கியவாறு மேற்கில் அமைந்துள்ளது. அது, கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேலான உயரத்தில் உள்ளது. அதன் பரப்பளவு, 4.4 ஹெக்டராகும். கட்டிட பரப்பளவு, 8392 சதுர மீட்டராகும்.

அதன் மண்டபங்கள், மலை நிலையின்படி, கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவை இடையிடையே சிதறப் பெற்று உள்ளன. அங்குள்ள கட்டிடங்கள், மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களின் நடையை முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன.

ஜியே தை கோயில், கி.பி.581-கி.பி.600 ஆண்டுகளுக்கிடையில் கட்டியமைக்கப்பட்டது. முன்பு, அது ஹுய் ஜூ கோயில் என அழைக்கப்பட்டது.

சீனாவின் புத்த மத வரலாற்றில், அதற்கு முக்கிய தகுநிலை உண்டு. லியௌ வம்சக்காலத்திற்குப் பின், அது, பல்வேறு அரசவைகளால் பெரும் கவனம் செலுத்தப்பட்டது. பல தலைமை முனிவர்கள், பேரரசரால் தாமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல புகழ்பெற்ற துறவிகள், அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். பல பேரரசர்கள், இங்கு வந்து, புத்தரை வணங்கியுள்ளனர். குறிப்பாக மிங் வம்சக்காலத்திலிருந்து அது, அரசவையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

இளந்துறவிகளுக்கான மேடை, அதிசய தேவதாரு மரம் மற்றும் பழங்கால குகையால், இது புகழ்பெற்றது. இளந்துறவிகளை சேர்க்கும் மேடை, கி.பி.1069ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. ஃபூ ச்சியன் மாநிலத்தின் ச்சுவான் ச்சோ நகரின் கை யுவான் கோயில் மற்றும் ச்சே ச்சியாங் மாநிலத்தின் ஹாங் ச்சோ நகரின் ச்சௌ ச்சிங் கோயிலின் இளந்துறவிகள் மடங்கள், சீனாவின் மூன்று இளந்துறவிகள் மடம் என அழைக்கப்பட்டது. அது, மூன்று மடங்களில், முதலிடம் வகிக்கிறது. அதனால், அது, உலகின் முதலாவது இளந்துறவி மடம் எனவும் அழைக்கப்பட்டது.

நவ சீனா நிறுவப்பட்ட பின், 1957ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 28ம் நாள், ஜியே தை கோயில் பெய்ஜிங் மாநகர அரசால் முதல் தொகுதி தொல்பொருள் பாதுகாப்பிடமாக அறிவிக்கப்பட்டது. 1980ம் ஆண்டு, பெய்ஜிங் மாநகர அரசு அதனை பெரும் அளவில் சீரமைத்துள்ளது. 1982ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 25ம் நாள், அது அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.