வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் புதிதாக அனாதைகளான குழந்தைகள் ஆதரவற்ற முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 335 ஆகும். இது வரை, அவர்கள் நல்லபடி குடியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான பணிகள் மேலும் நிதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் பொதுத் துறை பணியகத்தின் அதிகாரிகள் நேற்று chengdu நகரத்தில் தெரிவித்தனர்.
அனாதை குழந்தைகள் ஆதரவற்ற முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உள்ளூர் பொதுத் துறை பணியகத்தால் தொடர்புடைய நலவாழ்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டனர் என்று தெரிகிறது.
இத்தகைய மக்களுக்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து, சீன பொதுத் துறை அமைச்சகமும், சிச்சுவான் மாநிலத்தின் அரசும் தொடர்புடைய கொள்கைகளை வகுத்துள்ளன. தவிரவும், மாவட்டங்களின் முதியோர் இல்லம் போன்ற சமூக நல நிறுவனங்களை தொடர்புடைய வாரியங்கள் மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளன.
|